டிரம்ப் ஒரு ரகசிய ரஷ்ய உளவாளியா?: உலகை திடுக்கிடச் செய்திருக்கும் செய்தி

அமெரிக்க அதிபரான டிரம்ப் ஒரு ரஷ்ய உளவாளியா என்பதை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்க உளவுத்துறை விசாரணை ஒன்றை மேற்கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் உலகையே திடுக்கிடச் செய்துள்ளன.

FBIஇன் அப்போதைய தலைவரான James Comeyவை டிரம்ப் பதவியிலிருந்து தூக்கியதையடுத்து , டிரம்ப் ஒரு வேளை ஒரு ரஷ்ய உளவாளியாக இருப்பாரோ என்று கண்டுபிடிப்பதற்காக FBI விசாரணை ஒன்றை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ், பெயர் வெளியிட விரும்பாத சட்ட அலுவலர்களை மேற்கோள் காட்டி, FBI, 2017ஆம் ஆண்டு மே மாதம், குற்றவியல் மற்றும் உளவுப் பின்னணியில் அந்த விசாரணையை மேற்கொண்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் டிரம்பின் வழக்கறிஞரான Rudy Giuliani, அந்த குற்றச்சாட்டு வெளியாகி 20 மாதங்கள் ஆகியும், அந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக எந்த ஆதாரமும் வெளிப்படையாக வெளியிடப்படாததால், டிரம்ப் ஒரு ரகசிய ரஷ்ய உளவாளி என்னும் அந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மறுத்துள்ளார்.

2017ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி, ஹிலாரி கிளிண்டனின் இமெயில் விசாரணையை Comey கையாண்ட விதத்தை விமர்சித்த டிரம்ப் அவரை பதவியிலிருந்து நீக்கினார்.

ஆனால் அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்ட பிரச்சினையை FBI விசாரிக்க முயன்றதாலேயே, டிரம்ப் Comeyயை பதவியிலிருந்து அகற்றியதாக, பெயர் வெளியிட விரும்பாத முக்கியப் புளிகள் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

டிரம்ப் மீதான குற்றச்சாட்டு வெளியாகி 20 மாதங்கள் ஆன நிலையில், இதுவரை அது தொடர்பான ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.