ஐ.ஜி பொன்மணிகவேல் கைது செய்யப்படுகிறாரா?

சிலை மோசடியில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி தராமல் ஓயமாட்டேன் என ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தீவிரமாக களமிறங்கி அசத்திக்கொண்டிருக்கும் நிலையில், அவர் மீது போலீசார் சிலர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்ததன் பேரில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரு சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் அண்மையில் மீட்டு, கோயிலில் மீண்டும் ஒப்படைத்தனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட சில சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பது தெரியவந்து, அந்த சிலைகளை மீட்பதற்குரிய நடவடிக்கைகளை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் எடுக்கத் தொடங்கியதன் பலனாக, ஆஸ்திரேலிய நாட்டின் அதிகாரிகள் முதல் கட்டமாக 7 சிலைகளை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதன் அடுத்த அதிரடியாக, கடந்த 2016-ம் ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன் (சிலை கடத்தல் மன்னன்) வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.இதனைத் அடுத்து அவரை கைது செய்த போலீசார் கடத்தப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த விசாரணையில், தீனதயாளன் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில், பலதிடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. இதனையடுத்து அவரின் கூட்டாளிகள் பலரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவர்களை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தொழில் அதிபர் ரன்வீர்ஷா, அவரது தோழியான கிரண்ராவ் ஆகியோர் இந்த விவகாரத்தில் சிக்கவே, இவர்களின் வீட்டிலும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர்ஷாவின் வீட்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கற்சிலைகள், கல் தூண்கள் உள்ளிட்டவை சிக்கின. போயஸ்கார்டனில் உள்ள கிரண்ராவின் வீட்டினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இப்படி தனக்கு கொடுத்த பணியை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து வரும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் அவர்கள் பணி ஓய்வு பெரும் நிலையில், அவரின் பணியை இன்னும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், சிலைகடத்தல் வழக்கில் உரிய ஆவணங்கள், சாட்சியங்கள் இல்லாமல் வழக்குப்பதிவு செய்ய பொன்.மாணிக்கவேல் வற்புறுத்துகிறார் என்றும், வற்புறுத்தலை கடைபிடிக்காதவர்களை மிரட்டுவதாகவும் டிஜிபி அலுவலகத்தில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் டிஜிபி ராஜேந்திரனிடம் அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி உறுதி செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக் ஐஜி பொன்மாணிக்கவேலை நியமித்த நாள் முதலே அவரை அந்த பிரிவில் இருந்து பல்வேறு தரப்பினரும், தமிழக அரசும் முயற்சி செய்துவந்த நிலையில், தற்போது டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.