இந்திய அணியில் மாற்றம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகக்கான இந்திய அணியில்  ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, பெர்த்தில் 2-வது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்த இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா இன்னும் குணமடையாத காரணத்தால் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்டியா, நீண்ட ஓய்வில் இருந்து, தற்போது காயம் குணம் அடைந்துவிட்டதை தொடர்ந்து இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விபரம்:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், சத்தேஸ்வர் புஜாரா, அஜிங்க்யே ரஹானே, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், பர்தீவ் படேல், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால்