இனிமேல் யாழ்ப்பாணத்தில் அதிரடி வேட்டை! மக்களிற்கு முக்கிய அறிவித்தல்

யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் ஒன்று காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, 076 609 3030 என்ற இலக்கத்திற்கு குறித்த தகவல்களை வழங்குமாறு வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறை அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றச் செயல்கள் குறித்து ஏனைய பிரதேசங்களில் இருந்து தகவல் கிடைக்கப்பெற்றால், அந்தப் பிரதேசங்களிலும் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

காவல்துறையினருக்கு தகவல் வழங்க பொதுமக்களுக்கு பொறுப்பு உள்ளது என்றும், அதற்கமைய அவர்கள் தகவல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தமக்கு தகவல் வழங்குபவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தாம் முழுமையான பொறுப்பை ஏற்பதாகவும் வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.