இன்றைய ராசிபலன் (27/05/2018)

  • மேஷம்

    மேஷம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத் துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

  • கடகம்

    கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

  • கன்னி

    கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

  • துலாம்

    துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமன ப்பான்மை வந்து செல்லும். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உங் களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மதிப்புக் கூடும் நாள்.

  • மகரம்

    மகரம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.