முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்காலத்தில் இரண்டு முறை நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்த தேர்தலின் பின்னர் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ராஜயோகம் இருந்த போதிலும் அது அந்தளவுக்கு பலமாக காணப்படவில்லை.
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவிக்கு வர வாய்ப்புள்ளது, ஆனால், கோத்தபாய ராஜபக்ச இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னரே சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவிக்கு வர முடியும் எனவும் ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
விஜித ரோஹன விஜயமுனி சொய்சா என்ற இந்த ஜோதிடர் ஒரு முன்னாள் கடற்படை அதிகாரி. இலங்கை இந்திய உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக இலங்கை வந்திருந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அணி வகுப்பு மரியாதை வழங்கும் போது, அவரை தாக்கியவரும் இந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது.