பகலில் எலுமிச்சை கலந்த நீரைக் குடிப்பதை விட இரவு நேரத்தில் குடிக்கும், குறிப்பாக தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு குடிக்கக்கூடிய எலுமிச்சை நீரில் ஏரளமான நன்மைகள் இருக்கின்றன.
அதிக வேலைப் பளு மற்றும் டென்ஷன் காரணமாக தூக்கமின்றி தவிப்பவர்கள், எலுமிச்சை கலந்த நீர் குடிப்பது மிகவும் நல்ல பலனை தரும்.
உடலில் இருக்கும் செல்களை எல்லாம் புத்துணர்வு ஊட்டி துரிதமாக செயல்பட வைத்திடும். தசைகள், எலும்புகள் எல்லாம் வலுப்பெறும். ஹார்மோன் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
எலுமிச்சைத் தண்ணீரில் இருக்கும் ஆற்றல் இயற்கையாகவே கலோரி கரைத்திடும். இதில் டயட்டரி ஃபைபர் அதிகம் இருக்கிறது. இதனை நீங்கள் குளிர்ந்த நீரிலும், வெதுப்பான நீரிலும் கலந்து குடிக்கலாம்.
இரவில் எலுமிச்சை கலந்த நீரினை குடிப்பதால் உடலில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களை அழித்திடும். இதனால் உடலில் ஏற்படும் நோய்த் தொற்று அபாயங்கள் குறைந்திடும்.
தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் எலுமிச்சை கலந்த நீரைக் குடிப்பதினால் உங்களின் செரிமானத்தை இது தூண்டுகிறது.
எலுமிச்சையில் இருக்கக்கூடிய சத்துகள், நம் உடலில் சேருகின்ற டாக்சின்களை வெளியேற்றும். இது அதிகப்படியாக சேர்ந்தால் நம் உடல் மிகவும் சோர்வுற்று காணப்படும்.
எலுமிச்சை நீரின் முழுமையான பலனை அனுபவிக்க வேண்டும் என்றால் ஃப்ரஷ்ஷான பழத்தையே பயன்படுத்துங்கள்.
அதிக சூடான நீரில் எலுமிச்சை கலந்து குடிக்க வேண்டாம். இதில் சர்க்கரை சேர்க்காதீர்கள். அரை ஸ்பூன் அளவு தேன் மட்டும் தேவையென்றால் சேர்த்துக் கொள்ளுங்கள்.






