ஆயிரக் கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்ட ஈழத்துச் சிறுவனின் பூதவுடல்!

ஜேர்மன் நாட்டில் கடந்த 10ம் திகதி உயிரிழந்த இளம் உதைப்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரனின் பூதவுடல் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆயிரக் கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று பிற்பகல் ஈழவனின் இறுதி அஞ்சலி நிகழ்வு Sudfriedhof, Marienburger, Strasse 90E, 31141 Hildersheim என்னும் இடத்தில் நடைபெற்றுள்ளது.

புலம்பெயர் தமிழரான ஈழவனின் பூத உடலுக்கு ஜேர்மனிய மக்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதில், பாடசாலை மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள், கழக அங்கத்தவர்கள், பொறுப்பாளர்கள், தேசிய பயிற்சியாளர், முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள் மற்றும் ஐரோப்பியா முழுவதிலும் உள்ள விளையாட்டுதுறை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் வெள்ளை இனத்தவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அத்துடன், ஈழவன் விளையாடிக் கொண்டிருந்த Braunschweig கழகம், இறுதிச் சடங்குக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரசித்தி பெற்ற தேசிய கால்பந்தாட்ட வீரர்கள் பலர் தங்களது இரங்கல் செய்தியினை வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஐரோப்பாவின் மிக புகழ் பெற்ற பாடகர் Majoe ஒழுங்கமைப்பிலேயே இறுதி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பாடகர் Majoe ஈழவனின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்து தமிழர்களின் அடையாளமான ஈழவன் அனைவரின் கண்ணீர் துளிகளுடனும், கதறல்களுடனும் விடைபெற்றுள்ளார்.