சட்டம் ஒழுங்கு அமைச்சை என்­னிடம் ஒப்­ப­டைத்தால் 6 மாதங்­க­ளுக்குள் குற்­ற­வா­ளி­களை தண்­டிப்பேன் – சரத் பொன்­சேகா

சட்டம் ஒழுங்கு அமைச்சை என்­னிடம் ஒப்­ப­டைத்தால் 6 மாதங் களில் குற்­ற­வா­ளி­களை தண்­டித்து உரிய பெறு­பேறுகளை நாட்­டிற்கு காண்­பிப்பேன் என பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.

அத்­துடன் மக்­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்ற யோச­னையை நான் வன்­மை­யாக எதிர்க்­கின்றேன். ஏனெனில் அவரின் கையோங்­கினால் அரா­ஜக நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்­படும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பிட்டகோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற விசேட கூட்­டத்தின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கருத்து வெளி­யி­டு­கையில்,

தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்வோம். எனினும் கருத்து வேறு­பா­டுகள் உடை­யோரும் உள்­ளனர். ஐக்­கிய தேசிய கட்­சியில் எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை.

சுதந்­திரக் கட்­சி­யினர் சற்று பின்­ந­கர்ந்து செயற்­பாட்டில் உள்­ளனர். எனினும் ஜனா­தி­ப­தி­யுடன் பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­கொண்டு அரசாங்கம் முன்­செல்லும்.

இதன்­படி தற்­போது ஒரு வார­மாக இழு­பறி நிலையில் காணப்­படும் அர­சாங்­கத்தில் உள்ள நெருக்­க­டிகளைத் தீர்த்­துக்­கொண்டு நாம் முன்செல்ல தயா­ராகி விட்டோம்.

அத்­துடன் சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாக முன்­னைய காலங்­களில் உரிய முறையில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்படவில்லை என்ற குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

எனினும் சட்டம் ஒழுங்கு அமைச்சை என்­னிடம் ஒப்­ப­டைத்தால் 6 மாதங்களுக்குள் குற்­ற­வா­ளி­களை தண்­டித்து பெறு­பே­று­களை நாட்டுக்கு காண்­பிப்பேன்.

இதே­வேளை மக்­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்ற யோச­னையை நான் வன்­மை­யாக எதிர்க்­கின்றேன்.

ஏனெனில் அவரின் கையோங்­கினால் ஜன­வரி 8 ஆம் திக­திக்கு முன்பு இருந்த வெள்ளை வேன் கடத்தல் போன்ற அரா­ஜக நிலைமைகள் மீண்டும் நாட்டில் ஏற்­படும்.

நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு எதிர்க்­கட்­சியும் பல­மாக இருக்க வேண்டும். இது ஜன­நா­யக பண்­பாகும்.

அர­சாங்கம் தன்­னு­டைய செயற்­பா­டு­களை உரிய முறையில் முன்­னெ­டுக்­கா­மை­யினால் சிறந்த பாட­மொன்றை மக்கள் தமது வாக்­கு­ரி­மையின் ஊடாக வழங்கியுள்ளனர். ஆகவே குறித்த தவறுகளை திருத்திக்கொண்டு அரசாங்கம் முன்செல்ல வேண்டும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் என்பதனால் மஹிந்த ராஜபக் ஷவின் பலம் அதிகரித்தமை எமக்கு பிரச்சினையில்லை என்றார்.