திருமணமான இரண்டு நாளில் மாப்பிள்ளை படுகொலை:!

இந்தியாவில் திருமணமான இரண்டு நாளில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் லகன் சிங். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் உறவினர்கள் வீட்டுக்கு சென்று விருந்துகளில் கலந்து கொண்டு வந்த லகன் சிங் திருமணமான இரண்டு நாள் கழித்து திடீரென மாயமானார்.

இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் யமுனை நதி அருகில் லகன் சிங்கின் பைக் இருந்துள்ளது.

அந்த பகுதியை சுற்றி பொலிசார் தேடிய நிலையில் லகன் அங்கு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் பிரியங்காவின் முன்னாள் காதலன் அஜய் கோயல், லகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

பிரியங்கா அஜய்யுடன் பழகிய நிலையில் பின்னர் அவர் தொடர்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து லகன் செல்போன் நம்பரை எப்படியோ கண்டுப்பிடித்த அஜய் அவரை தொடர்ந்து போன் மூலம் மிரட்டி வந்துள்ளார்.

ஆனால் இது குறித்து லகன் வெளியில் சொல்லாமல் இருந்துள்ள நிலையிலேயே அஜய்யால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

லகனை கொலை செய்யும் அளவுக்கு அஜய் செல்வார் என நினைக்கவில்லை என பிரியங்கா பொலிசாரிடம் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.