ஆப்பிள்களில் ஏன் இந்த Sticker ஒட்டப்படுகிறது தெரியுமா?

பொதுவாக சந்தை அல்லது கடைகளில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள்களுக்கு மேல் வெள்ளை நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

ஆப்பிள்களை வாங்கி சாப்பிடுவதற்கு முன்னர் முதலில் அந்த ஸ்டிக்கர்களை தான் பிரித்திருப்போம்.

ஆனால் இந்த ஸ்டிக்கர்கள் ஏன் ஒட்டப்படுகிறது? அதில் என்ன எழுதியுள்ளது? என்பதற்கான காரணம் உண்மையில் 99% பேருக்கு தெரியாது.

அந்த வகையில் ஆப்பிள்களில் ஏன் இது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்ப்போம்.

ஸ்டிக்கர் ஒட்டப்படுவதற்கான காரணம்

கடைகளில் வாங்கும் ஆப்பிள் பழங்களை வீட்டிற்கு சென்று கழுவி விட்டு சாப்பிடுவதற்கு பார்க்கும் பொழுது ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இடங்கள் மாத்திரம் அழுகியோ அல்லது பூச்சியால் பாதிக்கப்பட்டோ இருக்கும்.

இது குறித்து கடைக்காரர்களில் விசாரித்தால் ஆப்பிள் ஏற்றுமதி தரம் வாய்ந்தது, விலை உயர்ந்தது, அதனால் தான் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது என விளக்கம் கொடுப்பார்கள்.

இப்படி கூறினால் இது முற்றிலும் தவறான கருத்து. கடைகளில் விற்கப்படும் ஆப்பிளில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் பழத்தின் தரம் மற்றும் அது எவ்வாறு விளைந்தது போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

1. பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் சில ஸ்டிக்கர்களில் நான்கு இலக்க எண்கள் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக 4026, 4987 போன்ற எண்கள் அதிகமாக இருக்கும்.

இந்த இலக்கத்தின் பொருள் பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்தி, இந்த பழங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்பதை குறிக்கிறது.

குறித்த ஆப்பிள்களில் பூச்சிக் கொல்லிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவே இந்த பழங்கள் விலை குறைவானவை, இதை உண்பதால் உரம் மற்றும் பூச்சி மருந்துகளுடன் பழங்களை வாங்குகிறோம் என்று அர்த்தம்.

2. இன்னும் சில பழங்களில் ஐந்து இலக்க எண்கள் எழுதப்பட்டிருக்கும்.

உதாரணமாக, 84131, 86532 என 8ல் தொடங்கும் இலங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இது போன்ற பழங்கள் மரபணு மாற்றப்பட்டவை என்று அர்த்தம்.

குறித்த ஆப்பிள்கள் பூச்சிக்கொல்லி பயன்படுத்திய பழங்களை விட, சற்று விலை அதிகமாக இருக்கும். இதில் நன்மை, தீமை என இரண்டும் இருக்கும் என பொருட்படுகிறது.

3. 9ல் தொடங்கும் 5 இலக்கக் குறியீடு சில பழங்களில் காணப்படும்.

உதாரணமாக 93435 என எழுதப்பட்டிருந்தால், அது இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட பழங்கள் என்றும், பூச்சிக் கொல்லிகள், ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று அர்த்தம்.

இது பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட பழம் என்பதால் விலை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும், இது ஆரோக்கியமானது என பொருட்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு ஸ்டிக்கருக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருந்தாலும்,சிலர் போலியான ஸ்டிக்கர்களை ஒட்டு விடுகிறார்கள். இதனால் எது உண்மையானது? என வாடிக்கையாளர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போய் விடும்.

முக்கிய குறிப்பு

கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டிய பழங்களை வாங்கும் போது, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.