பிரான்ஸ் ரெயில் நிலைய கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

பிரான்ஸ் ரெயில் நிலைய கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மார்செய்ல் நகரில் உள்ள செயின்ட் சார்லஸ் சுரங்க ரெயில் நிலையத்தில் நேற்று ஒரு மர்மநபர் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கோரத்தாண்டவத்தில் ஈடுபட்ட அந்நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபர் யார்?, காரணம் என்ன? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இந்த தகவலை அந்த அமைப்பின் அமாக் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது என தீவிரவாதிகள் நடவடிக்கைகளை கண்காணிக்கும் சிறப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.