யாழ். வடமராட்சி பகுதியில் தன் அவயங்களை இழந்த பெண் ஒருவர் கணினி வகுப்பை நடத்தி தனது வாழ்க்கையைக் கொண்டு செல்வது தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
யுத்தக் காலப் பகுதியில், செபஸ்டியன் செல்வநாயகி என்ற 42 வயதான பெண் தனது இரு கைகளையும் இழந்துள்ளார்.
1990ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது தனது கைகளை அவர் இழந்துள்ளார்.
தாக்குதலில் தனது இரு கைகளையும் இழந்துள்ளபோதிலும் தனது கால்களைக் கொண்டு பல்வேறு பணிகளை அவர் மேற்கொண்டு வருகின்றார்.
ஐந்து கணினிகளைக் கொண்டு அப்பகுதி மாணவர்களுக்கு கணிணி தொடர்பான கற்கைகளை கற்பித்து வருகின்றார்.
கைகள் இல்லாத போதிலும் தனது கால்களைக் கொண்டு அவர் கணினி வகுப்புக்களைச் செய்து வருகின்றார்.
வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள தனது சிறிய வீட்டில் குறித்த வகுப்புக்களை அவர் நடத்தி வருகின்றார்.
செல்வநாயகியின் அலுவலக உதவியாளர் கணினியை முதலில் செயற்படுத்துவார், அதனைத் தொடர்ந்து தனது கால் விரல்களால் கடவுச்சொல்லை செல்வநாயகி தட்டச்சு செய்வாராம்.
கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக குறித்த பெண் இவ்வாறே தட்டச்சு செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது கைகளை அவர் இழப்பதற்கு முன்னர் அலுவலக பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், நிரலாக்க மற்றும் தரவு உள்ளீடு போன்ற பல வேலைகளை அவர் செய்துவந்துள்ளார்.
திறந்த பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் கற்கைகளை செல்வநாயகி பூர்த்தி செய்துள்ளார்.
த்தம் முடிவடைந்த மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், 2012ஆம் ஆண்டில் செயற்கை கைகளை பொருத்தும் முயற்சிகளை மேற்கொள்ள அவர் சென்னை சென்றுள்ளார். அதிக செலவுகள் காரணமாக பின்னர் அவர் அந்த முயற்சியை கைவிட்டுள்ளார்.
தொடர்ந்து செல்வநாயகியின் தந்தை இறந்த பிறகு தந்தையின் நண்பர்கள் மற்றும் அவரது பாதுகாவலர்களே அவரை பாதுகாத்து வருகின்றனர்.