அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதி இவர்தான்: அடித்துச் சொல்லும் ஆய்வாளர்கள்

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் அந்நாட்டின் 45-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பார் என்று வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆய்வாளர்கள் குழு ஒன்று உறுதிபட கூறுகின்றது.

வாஷிங்டனில் வரலாற்று ஆசிரியராக இருந்து வருபவர் ஆல்லன் லிட்சுமன். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலங்களில் இவர் வெளியிட்டுள்ள கணிப்புகள் அனைத்தும் இதுவரை நிறைவேறியுள்ளன.

இந்த முறை இவர் தெரிவித்துள்ள கருத்துகள், இதுவரை அமெரிக்காவின் முக்கிய செய்தி ஊடகங்கள் எதுவும் வெளியிடாத வகையில் அமைந்துள்ளது. காரணம், இதுவரையான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விடவும் ஹிலாரி கிளிண்டனே அதிக விழுக்காடு அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

ஆனால் வரும் 8-ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மாபெரும் திருப்பம் ஏற்படும் எனவும், அதில் அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பார் எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவின் தேர்தல் மற்றும் அரசியல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஆல்லன், 1860 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டுவரையான அனைத்து அமெரிக்க தேர்தல்களையும் ஆராய்ந்து ஒரு புது கோட்பாட்டினை வடிவமைத்துள்ளதாகவும், அதன்படியே இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர் இதுவரை வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்தும் துல்லியமாக அமைய தாம் உருவாக்கியுள்ள பதின்மூன்று அளவுகோல்களை பயன்படுத்துகின்றார்.

அதில் மக்களிடையே வேட்பாளர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு, வேட்பாளர்கள் குறித்த மக்களின் மதிப்பீடு அல்லது அவர்கள் மீது சமூகத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவைகள் வெற்றி தோல்வியை முடிவு செய்யும்.

இதில் ஆறு அளவுகோல்கள் டிரம்புக்கு சாதகமாக இருப்பதாகவும் அதனாலையே இந்த முறை டிரம்ப் ஆட்சியை கைப்பற்றி அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொள்வார் என ஆல்லன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி கடந்த செப்டம்பர் மாதம் ஆல்லன் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளுக்கு பின்னரே ஹிலாரி குறித்து டிரம்ப் குறித்தும் புகார்களும் குற்றச்சாட்டுகளும் நாளுக்கு ஒன்று என வெளியாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனாலும் அரசியல் சூழல் டிர்ம்புக்கு சாதகமாகவே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி இந்த தேர்தல் மிக நெருக்கமான முடிவுகளை கொண்டிருக்கும் என்றும், வெற்றி தோல்விகள் மிக அருகாமையில் இருக்கும் என்றும் ஆல்லன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு ரொனால்டு ரீகன் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்பதை முதன் முதலில் வெளியிட்டவர் ஆல்லன் என்பது குறிப்பிடத்தக்கது

யாழ். பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியது

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முழுமையாக வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கமைய வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட கலை பீடம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்கள் இன்று கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்ட விடயங்கள் குறித்து இன்று (02) அனைத்து தரப்பினரையும் தெளிவுபடுத்த எண்ணியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கம் கூறியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் மாணவர் பிரதிநிதிகளிடையில் நேற்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து வகுப்பு பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் கடந்த மாதம் 20ஆம் திகதி உயிரிழந்ததை அடுத்து மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை விபத்து என பொலிஸார் குறிப்பிட்ட போது மாணவர்களின் சடலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, ஒருவருடைய சடலத்தில் துப்பாக்கிச் சூட்டு காயம் அடையாளம் காணப்பட்டது.

இதனை அடுத்து இந்த மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் மாத்திரமின்றி அனைத்து சாராரும், சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற சந்திப்பில் தமிழ் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மாத்திரமே கலந்து கொண்டிருந்த நிலையில், வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை.

மேலும், சந்திப்பின் போது ஏனைய தமிழர் தரப்பினர் பேச்சு

குழந்தையின் உயிரை பறித்த தோடம்பழம்

தோடம்பழ விதை தொண்டையில் சிக்கி 11 மாத குழந்தையொன்று மூச்சுத்திணறி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று நேற்று சூரியவெவ, பெத்தேவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தை வீட்டில் விளையாடிகொண்டிருந்த போது ஏதோ ஒரு பொருள் தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்படவே நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் மருத்துவர்களால் அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தொண்டையில் தோடம்பழ விதை சிக்குண்டிருந்தமை பின்னரே தெரியவந்துள்ளது.

இதேவேளை, குழந்தைகளை கீழே விளையாடவிடும்போது பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டுமென வைத்தியர்களும் பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.

4 வயது சிறுமியை நரபலி கொடுத்த கும்பல்..! அதிர்ச்சி அளிக்கும் காரணம்..!!

அசாம் மாநிலத்தில் தொலைந்து போன மொபைல் போனை கண்டுப்பிடிப்பதற்காக 4 வயது சிறுமியின் கழுத்தை அறுத்து நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள ரத்னாபூர் என்ற ஆதிவாசி கிராமத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் கைகள் துண்டிக்கப்பட்டு, தலை வெட்டப்பட்ட நிலையில் ஒரு சிறுமியின் உடல் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நரபலி கொடுக்கப்பட்ட சிறுமி சூனு கோட்பா கடந்த மாதம் 24 ஆம் தேதியில் இருந்து மாயமானதாக அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ரத்னாபூர் கிராமத்தில் குடியிருந்து வரும் ஹனுமன் பூம்ஜி என்பவரது மொபைல் போன் திருடு போனதையடுத்து, போனை மீட்டெடுக்கும் நோக்கில் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவரது நண்பர் ஒருவர் அளித்த ஆலோசனையின் பேரில் பூம்ஜி, கப்பார் சிங் என்ற மந்திரவாதியை அணுகினார்.

மொபைலை கண்டுப்பிடிக்க வேண்டும் என்றால் காளி தேவிக்கு 4 வயது சிறுமியை உயிர்ப்பலி தர வேண்டும் என்று அந்த மந்திரவாதி கூறியுள்ளார்.
இதனால் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி சூனு கோட்பாவை கடத்தி சென்று நரபலி கொடுத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய பூம்ஜி மற்றும் அவரது நண்பர் அலி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். நரபலி பூஜை மேற்கொண்ட மந்திரவாதியை போலீஸார் தேடி வருகின்றனர்.

நயன்தாராவுக்கு முன் ஜோதிகா… தயங்கிய பிரகாஷ்ராஜ்! ‘சிவகாசி’ பற்றி 6 ரகசியங்கள்

“ரஜினி ஸ்டைலில் ஒரு விஜய் படம் பண்ணனும்னு, நான் ரொம்ப மெனக்கெட்டு பண்ணின படம் திருப்பாச்சி. திருப்பாச்சி ரிலீஸாகி பத்தாவது நாள், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் எனக்கு போன் பண்ணினார். ‘விஜய், அடுத்தப் படத்தை ஸ்ரீ சூர்யா மூவிஸ்க்கு தான் பண்றார். அவர் தான் உங்ககிட்ட பேச சொன்னார். மீட் பண்ணலாமா’னு கேட்டார். நானும் அவருக்கு ஓகே சொல்லிட்டு, விஜய்க்கு போன் பண்ணி கேட்டேன். “ஆமாணா, அடுத்தப் படமும் சேர்ந்து பண்ணலாம். கதை ரெடியா இருக்காணா’னு கேட்டார். ரெடியா இருக்குனு படத்தோட ஒன் லைனை சொல்லி ஓகே வாங்குனேன். அடுத்த ஒரு மாசத்துல முழு படத்தையும் எழுதிட்டேன். இப்படி தான் சிவகாசி படம் உருவாச்சு” என சிவகாசி படம் வந்து 11 வருஷங்கள் ஆனாலும், அன்று நடந்த விஷயங்களை மறக்காமல் சொல்ல ஆரம்பித்தார் இயக்குநர் பேரரசு.
“திருப்பாச்சி ஹிட்டானப் பிறகு விஜய் என்னை நம்பி கொடுத்த படம் சிவகாசி. முதல் படத்தை போலவே இரண்டாவது படத்தையும் ஹிட்டாக்கணும்ங்கிற வெறி எனக்குள்ள இருந்தது. சிவகாசி படத்தோட இரண்டாம் பாதியில விஜய், வில்லன்களை ஆக்ரோஷமாக எதிர்க்கிற மாதிரி தான் எழுதினேன். அதுக்கப்பறம், திருப்பாச்சியும் சிவகாசியும் ஒண்ணாகிடுமேனு, வில்லன் பிரகாஷ்ராஜை காமெடியாகவே பலி வாங்குற மாதிரி மாத்தினேன். ரைஸ் மில் சீன், தேர்தல் சீன்னு காமெடிக்கான களத்தை உருவாக்கி படத்தை ஆக்ஷன், காமெடியாகவே கொண்டு போனேன். அதுமட்டுமில்லாம, வில்லன் ஹீரோக்கு அண்ணனாக இருந்தனால அதிகமாக அடிக்கிற மாதிரி காட்சிகள் வைக்கக்கூடாதுன்னும் முடிவு பண்ணினேன். முழு கதையை விஜய்கிட்ட சொன்னதும் காமெடி ரொம்ப சூப்பரா இருக்குன்னு குஷியாகிட்டார். அவர் முகத்தில் தெரிஞ்ச அந்த சந்தோஷத்திலேயே நான் சிவகாசி படத்தோட வெற்றியை உறுதி செஞ்சுட்டேன்.
அதே மாதிரி படத்தோட ஷூட்டிங் சிவகங்கையில் எடுக்கிறதால ரசிகர்கள் அதிகமா வந்துட்டா, உங்களால சரியா ஒர்க் பண்ண முடியாது. அதுனால வேற லோக்கேஷன் போய்கலாமானு விஜய் கேட்டார். அப்படி எது நடந்தாலும் பரவாயில்லை, படத்தோட கதைக்கு அந்த இடம் தான் கரெக்ட்டா இருக்கும்னு அவரிடம் சொல்லிட்டு ஷூட்டிங் போனோம். விஜய் மாதிரி விஜய் ரசிகர்களும் ரொம்ப அமைதியானவங்க, ஷூட்டிங்ல எங்களுக்கு எந்த பிரச்னையும் கொடுக்காம நல்லபடியாக படத்தை முடிக்க உதவுனாங்க.

கதையை எழுதும் போதே பிரகாஷ்ராஜ் தான் வில்லன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனால் அவர் அப்போ தான் வில்லன் வேடங்களில் இருந்து வெளியே வந்து மொழி, அபியும் நானும் மாதிரி வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். அதனால, அப்பா இறப்புக்கு காரணமான பையனாகவும், அம்மா-தங்கச்சியை பார்த்துக்காத பையனாகவும் நடிக்க அவர் தயங்கினார். அவரை ரொம்ப சமாதானப்படுத்தி தான் இந்த படத்தில் கமிட் பண்ணுனேன். அவரோட கதாப்பாத்திரமும் படத்திற்கு பலமாக இருந்தது.
சிவகாசி படத்துல விஜய்க்கு அம்மாவாக முதலில் ஜெயசுதாவை தான் நடிக்க கேட்டோம். அப்போ அவங்களால ஹைதராபாத்தை விட்டு வர முடியாத சூழ்நிலையில் இருந்தாங்க. ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் வச்சுக்கிட்டா எனக்கு ஓகே சார்னு சொன்னாங்க. ஆனால், நாட்டரசன்கோட்டையில ஷூட்டிங் எடுத்தாதான் லைவ்வா இருக்கும்னு, கீதாவை நடிக்க வைச்சோம்.
சிவகாசி படத்துல பாடல்கள் எல்லாம் பக்கா ஹிட். அதற்காக ஸ்ரீகாந்த தேவாவிற்கு தான் நன்றி சொல்லணும். ஆனால் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், சிவகாசி படத்துக்கு பெரிய இசையமைப்பாளர்களில் ஒருவரைத் தான் கமிட் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், நான் பிடிவாதமாக நின்று ஸ்ரீகாந்த் தேவாவை கமிட் செய்தேன். பாடல்களை கேட்டப்பின்பு தான் நினைத்திருந்த பெரிய இசையமைப்பாளர்விட ஸ்ரீகாந்த் தேவா பிரமாதமாக இசையமைத்திருப்பதாக ரத்னம் சொன்னார்.
பாடல்கள் என்றதும் ‘கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாரியா..? குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா..?’ பாடலை மறக்கமுடியாது. அந்த பாட்டுல விஜய்யும் நயன்தாராவும் படு பயங்கரமா ஆடியிருப்பாங்க. ஆனால், அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆட முதலில் ஜோதிகாவை தான் கேட்டோம். ஆனால் அந்த டைம்ல தான் சூர்யா-ஜோதிகா கல்யாண ஏற்பாடு நடந்திட்டு இருந்தது. அதனால அவங்களால நடிக்க முடியலை. அப்போ தான் சந்திரமுகி படம் வந்து நயன்தாரா அதிக படங்கள் நடிக்க ஆரம்பிச்ச டைம். நாங்க ஒரு பாட்டுக்கு ஆட அழைச்சதும் ஐட்டம் டான்ஸ்னு நினைச்சு ‘மாட்டேன்’னு சொல்லிட்டாங்க. அதுக்கப்பறம் படத்தோட கதையை அவங்ககிட்ட சொல்லி, பாட்டை கேட்க வைச்சு ஓகே பண்ணினோம். இன்றைக்கும் அந்த பாடலை யாராலும் மறக்கமுடியாது. இப்படி பல விஷயங்களை சிவகாசி படம் எனக்கு ஞாபகப்படுத்தும். இன்று அந்த படம் வந்து 11 வருஷம் ஆச்சு. மக்கள் இன்னும் அந்த படத்தை மறக்கலைனு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமான இருக்கு” என்றவரிடம், சிவகாசி படத்தோட இரண்டாம் பாகம் எடுக்கிற எண்ணம் இருக்கா என்று கேட்டோம்.
“இரண்டாம் பாகம் எடுக்கிறதா இருந்தா திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதினு என்னோட எல்லா படத்தையும் எடுக்கலாம். ஆனால், அபப்டி எடுக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை” என்றவர், தன்னோட அடுத்தப்படத்தை பற்றின அப்டேட்டையும் பதிவு செய்தார். “சமீபத்தில் சின்ன சின்ன படங்கள் பண்ணி, அது எதுவும் செட்டாகலை. அடுத்து படம் பண்ணினா பெரிய படமாக தான் இருக்கணும்னு முடிவு பண்ணி, அதற்காக வேலைகளையும் தொடங்கிட்டேன். சிவகாசி படத்தின் இரண்டாம் பாகம் வராது. ஆனால், கண்டிப்பாக விஜய் பேரரசு கூட்டணியில் இன்னொரு படம் வரும்” என்று நம்பிக்கையுடன் முடித்தார் இயக்குநர் பேரரசு.

பிரிந்துவிடலாம் என கூறிய காதலி..! காதலன் செய்த கொடூர செயல் என்ன தெரியுமா..?!

சுவிட்சர்லாந்து நாட்டின், பேர்ன் நகரில் ஒரு காதல் ஜோடி வசித்து வந்தது. இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளால் காதலை முறித்துக்கொள்வதாக காதலி கூறியுள்ளார்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான காதலன், தனது காதலியை தீர்த்துக் கட்ட முடிவு கட்டினார்.

இந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஒரு பேருந்துநிலையத்திற்கு  காதலியை வரவழைத்தார்.  சில நிமிடங்களில் காதலி ஒரு பெண்ணுடன் அங்கு வந்து சேர்ந்தார்.

அப்போது, திடீரென  காதலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலியை குத்த முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது தோழி காதலனை தடுக்க முயன்றபோது அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

தோழி அங்கிருந்து தப்பி ஓடியதும், தனது காதலியை விரட்டிச் சென்ற காதலன் அவரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளான்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பேர்ன் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

அம்மாவை பிடித்த அம்மம்மா பேய் ? லண்டன் ஊடகம் பரபரப்பு தகவல்!!!!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு பில்லி சூனியம் வைத்ததுதான் காரணம் என லண்டன் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு தற்போதும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இதற்கான காரணம் பில்லி சூனியம் ஏவப்பட்டுள்ளது என புதுத் தகவல் வெளிவந்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் தங்கள் பத்திரிக்கைக்கு அந்த செய்தியை கூறியதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

திமுகவினர் சிலர் பல இலட்சங்களை செலவு செய்து, அவருக்கு எதிராக செய்வினை மற்றும் பில்லி சூனியம் ஆகியவற்றின் மூலம், அவரது உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம், திமுக கட்சியில் மட்டுமல்ல, அவரது சொந்த கட்சியிலேயே கூட யாராவது இப்படி செய்திருக்கலாம் என்றும் அந்த ஜோதிடர் கூறியதாக குறித்த செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், சமீபத்தில் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கும் பில்லி சூனியம்தான் காரணம் என அந்த ஜோதிடர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அம்மாவை பிடித்த அம்மம்மா பேய் என சமூக ஊடகங்களில் கொமெண்டுகள் வந்து குவிகின்றன .இந்த காலத்தில போய் பேயாவது பிசாசாவது .

நடிகை நிஷாவுக்கு ஒரு டெல்லி மந்திரி மூலம் எய்ட்ஸ்..! கதறி அழுத கமல்..!

நிஷா..இவர் பெயரைக் கேட்டாலே இளவட்டங்கள் குஷி ஆகிவிடுவார்கள். கமல்,ரஜினி துவங்கி சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா.. சிவராஜ் குமார் , விஷ்ணுவர்தன் சன்னிதியோல், கோவிந்த, அணில் கபூர் என ஐந்து மொழிகளில் பட்டையை கிளப்பியவர் நிஷா.

கமலுக்கு இவர் மிகவும் ராசியான நாயகி. டிக்டிக்டிக் துவங்கி நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.உட்கார நேரமின்றி பறந்து கொண்டே இருந்தார்..!

அப்போது மத்திய மந்திரியாக இருந்த பிரபலம் அவர். அவரின் வாரிசு கோடா அடுத்து மந்திரியாக இருந்தார்.! அந்த மத்திய அமைச்சர் சபலக் கேஸ்…!நிறைய பெண்களோடு தொடர்பு.

அவருக்கு எய்ட்ஸ் இருந்தது. அது தெரியாமல் இந்த நடிகையோடு உறவு கொள்ள நிஷாவிற்கும் எய்ட்ஸ். அந்த மந்திரி இறந்து போனார். ஆனால் எய்ட்ஸ் என்கிற காரணம் மறைக்கப்பட்டது..

நிஷாவிற்கு தனக்கு எய்ட்ஸ் என்று தெரிந்த கணமே நொறுங்கிப் போனார். கதறி அழுதார்..! காரணம் அந்த அமைச்சர் என்று தெரிந்து கதறினார்..!

நடித்துக்கொண்டு இருந்த படங்களை முடித்தார். அமைதியாக தமிழ்நாடு வந்தார். நாகூரில் சத்தமில்லாமல் ஒதுங்கிக் கொண்டார்.

கமல் தேடி அலைந்து ஒருவழியாக கண்டு பிடித்து போய்ப் பார்த்தார். அவரிடம் நிஷா தனக்கு எய்ட்ஸ் என்று கூறி அழுதிருக்கிறார்..! கமல் துடித்துப் போனார்.

என்ன செய்தாவது காப்பாற்றிவிட போராடினார் கமல்..! ம்ஹூம் எய்ட்ஸ் ஒன்றுமே செய்ய முடியாது..!

நிஷாவின் கடைசிக் காலம் மிகப் பயங்கரம்..! அனாதையாக தர்கா வாசலில் படுத்துக் கிடந்தார். உறவுகள் எல்லாம் காசோடு ஓடிவிட்டனர்.

பிச்சை எடுத்து சாப்பிட்டார். ஒரு நாள் வீதியில் செத்துக் கிடந்தார்..!! அவர் இறந்த பின் தான் அவர் ஒரு டாப் லெவல் ஹீரோயின் என்பதே மற்றவர்களுக்கு தெரியும்..!

நகராட்சி வண்டியில் எடுத்துப் போட்டு கொண்டு போய் எரித்தார்கள்…!!!

சந்தர்ப்பத்தை சாணக்கியமாக கையாள வேண்டும்: கொண்டாடும் அரசுகளே ஒருநாள் குப்பையிலும் வீசும்!!

அண்மைக்காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனின் கருத்துக்கள் தமிழ் மக்களில் பெருமபாலானவர்களினால் இரசிக்கப்படவில்லை.

குறிப்பாக, யாழ். பல்கலைக் கழக மாணவர்களின் படுகொலை விடயத்தில் எதிர்க் கட்சித் தலைவரின் மென்மையான கண்டனத்தையும் வடக்கு முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட 21 ஆண்டு நிறைவு நிகழ்வில் வெளியிட்ட கருத்துக்களையும் அண்மைய உதாரணங்களாக சொல்ல முடியும்.

இவ்வாறான மென்போக்குகளும் கருத்துக்களையும் பார்க்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் தலைவராக இருக்காமல்,அரசாங்கத்தின் விருப்பத்துக்குரிய தமிழ்த் தலைவராக மாறிப்போய்விட்டாரா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுவதை அவதானிக்க முடிகின்றது.

ஆனால், வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு பெற்றுக்கொள்ளப்படுகின்ற தீர்வே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாக அமையும் என்று சம்பந்தன் கூறியிருக்கின்றார். சமஸ்டி அடிப்படையிலான தீர்வே தேவை என்றும் கூறியிருக்கின்றார்.

இருப்பினும், அரசியல் தீர்வு வரைபை விவாதிக்கும் வழி நடத்தல் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக இருக்கும் சம்பந்தன் அவர்கள் இதுவரை அவ்வாறான பரிந்துரை எதையும் முன்வைக்கவில்லை என்றே தெரியவருகின்றது. பிரதமரைப் பொறுத்தவரை சமஸ்டித் தீர்வை முற்றாகவே நிராகரிக்கின்ற போக்கையே கொண்டிருக்கின்றார்.

தவிரவும், வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதே இன்றைய அரசியல் சூழலாகும். ஆரசாங்கமே வடக்கும் கிழக்கும் இணைப்பதை விரும்பவில்லை என்பது ஒரு புறமிருக்க, கிழக்கு மாகாணத்தில் கணிசமான அளவில் வாழம் முஸ்லிம்களும் வடக்கும் கிழக்கு இணைவதை விரும்பவில்லை என்பதை பகிரங்கமாகவே முன்வைத்து வருகின்றனர்.

வடக்கும் கிழக்கும் இணைந்த தீர்வே தேவை என்று கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணக்கமாக உறவு கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையே கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தியும், தலைமையை கிழக்கிலிருந்து உருவாக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியும் வருகின்றனர்.

இந்த நிலையில் முஸ்லிம்களை சமரசம் செய்து, புட்டும் தேங்காய்ப் பூவும் கதை கூறி வடக்க கிழக்கு இணைப்புக்கு சம்மதம் பெற்றுவிடலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பகல் கனவு காண்கின்றனர் என்பதே அவர்களுக்கு எதிரான விமர்சனமாக இருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில்விக்கிரம சிங்க ஆகியோரும் சரி, தென் இலங்கையின் எந்தவொரு தலைமையும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகு ஒரு மாநிலமாகவும், அதற்குள் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் அதிகாரங்களையும் தீர்வாக வழங்கப்போவதில்லை.

இதுவே, பூகோள மற்றும் பிராந்திய அரசியல் போக்கின் யதார்த்தமாக இருக்கின்ற நிலையில், பிரதமர் தலைமையிலான வழி நடத்தல் குழு மூலமாக தமிழ் மக்களுக்கு ஏற்கக்கூடிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமா? – என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும் என்பதே அநாதரவாகி நிற்கும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

தமிழ் மக்கள் பெருத்த நம்பிக்கையுடனும், இறுதிச் சந்தர்ப்பமாகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து பெரும்பான்மை வெற்றியை வழங்கியிருக்கின்றார்கள். இந்த சந்தர்ப்பம் நழுவ விடப்படுமானால் அந்த பின்னடைவு தமிழ் இனத்தை மேலும் பல கட்ட பின்னடைவுகளுக்கு தள்ளிவிடும் அபாயமுள்ளது.

அரசாங்கத்தை விட்டு பிரிவதும், அரசாங்கத்தை எதிர்ப்பதும் பெரிய காரியங்களல்ல. எந்த அரசு தமிழ் மக்களின் உரிமைகளைத் தர மறுக்கின்றதோ அந்த அரசிடமிருந்து உரிமையை வென்றெடுக்கும் சாணக்கியத்தை கச்சிதமாக நிறைவேற்றுவார்கள் என்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.

சிங்கள அரசுகள் காலத்துக்காலம் தமது தேவைக்கு ஏற்ப பல தமிழ்த் தலைமைகளை தூக்கி வைத்துக் கொண்டாடி இருக்கின்றன. தமது காரியங்கள் முடிந்ததும் தாம் தூக்கிக் கொண்டாடிய தமிழ்த் தலைவர்களை தொப்பென்று குப்பையில் வீசியும் இருக்கின்றன.

எனவே இன்று சம்பந்தரைக் கொண்டாடும் அரசு தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும்,சவால்களும் சாதகமாக மாறுமாக இருந்தால் சம்பந்தரையும் தூக்கி வீசி விடும். ஆகவே தற்போதைய வாய்ப்பை தமிழ் மக்களுக்கு சாதகமாக நகர்த்தி வெற்றி காணவேண்டிய பொறுப்பு சம்பந்தருக்கு இருப்பதை அவர் மறந்துவிடலாகாது.

வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வேகமான செயற்பாடுகள் அவசியம்: ஐரோப்பிய ஒன்றியம்

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அவசியமான செயற்பாடுகள், துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழுவினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தனர். இதன்போது குறித்த குழுவின் தலைவர் ஜீன் லம்பேட் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

அத்தோடு, இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டமானது, சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு இருப்பதோடு, இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான ஈடுபாடுகளுடன் காணப்படுவது அவசியமென்றும், இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் அவதானிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் பாராட்டை தெரிவித்த ஜீன் லம்பேர்ட், குறித்த அலுவலகத்தின் ஊடாக மக்கள் தமது கேள்விகளுக்கான பதிலை பெற்றுக் கொண்டால் மாத்திரமே அது உண்மையான ஒரு மாற்றத்தினையும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் விடயமாகவும் கருத முடியுமென மேலும் தெரிவித்தார்.

மேலும், புதிய அரசியலமைப்பானது சகல மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையவேண்டும் என்றும், குறிப்பாக புதிய அரசியலமைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் சிறந்த விடயமாக அமையுமென்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழுவின் தலைவர் ஜீன் லம்பேர்ட் இதன்போது தெரிவித்தார்.

 

முட்டையை ஏன் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது தெரியுமா?

வீட்டில் ப்ரிட்ஜ் இருப்பதால், பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ப்ரிட்ஜில் சமைத்த உணவுகள் அனைத்தையும் வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. இதனால் உடலுக்கு தான் தீங்கு விளையும். எப்படி சமைத்த உணவை ப்ரிட்ஜில் வைப்பது நல்லதில்லையோ, அதேப்போல் நாம் வாங்கும் முட்டையையும் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமாம். அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அவை பாலைப்போல் திரிந்துவிடுகிறதாம்.

ஐரோப்பிய முட்டை மார்கெட்டிங் ஒழுங்குவிதிகளின் படி, முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரித்து, பின் அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும் போது, முட்டையின் மேல் அதிகம் வியர்த்து, முட்டையின் ஓட்டில் உள்ள சிறுதுளைகள் வழியே பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து உள்ளே செல்லுமாம். எனவே முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து சாப்பிட்டு விட வேண்டும்  அல்லது அறை வெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும்.

நாம் வாங்கும் முட்டை பிரஷ்ஷாக இருந்து, அதில் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக்கொண்டிருந்தால், அந்த முட்டையை ப்ரிட்ஜில் வைக்க கூடாது.

ஒருவேளை நீங்கள் வாங்கிய முட்டையில் சால்மோனெல்லா வகை பாக்டீரியா இருந்து, அதனை ப்ரிட்ஜில் வைத்து பராமரித்தால், இதர முட்டைகளும் அந்த கொடிய பாக்டீரியாவால் தாக்கப்படும். எனவே இதனைத்தவிர்க்க வேண்டுமெனில், அறைவெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும்.

ஒருவேளை  முட்டையைப்பயன்படுத்தி கேக் செய்ய வேண்டுமெனில் முட்டையை ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்க கூடாது. ஏனெனில் ப்ரிட்ஜில் வைக்கும் முட்டையினுள் உள்ள கருவானது மிகுந்த குளிர்ச்சியுடன் இருப்பதால், அதைக்கொண்டு கேக் செய்ய நினைத்தால், அந்த கேக் கடினமாக இருக்கும்.

முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா வகை பாக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும்.

கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது. பாக்டீரியாக்கள் கொண்ட முட்டைகளை நாம் வாங்கியவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம்.

இந்த பாக்டீரியா சாதாரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருக்கமடைகின்றன. இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

இரண்டே நிமிடத்தில் உங்கள் பற்கள் பளிச்சிட வேண்டுமா?

அன்றாட வாழ்வில் நாம் பலவகையான உணவுகளை சாப்பிட்டு வருகின்றோம்.

இதனால் நம்முடைய பற்களில் மஞ்சள் போன்ற கரைகள் ஏற்படுகிறது.

நாம் சிரிப்பதை மிகவும் அழகாக காட்டுவது பளிச்சிடும் நமது வெண்மையான பற்கள் தான்.

எனவே பற்களில் ஏற்படும் மஞ்சள் கரையால், நமது வெண்மையான பற்களின் அழகை கெடுக்கிறது.

பற்களில் ஏற்படும் மஞ்சள் கரையை போக்கி, எப்போதும் பளிச்சிடும் வெண்மையான பற்களைப் பெறுவதற்கு இதோ சூப்பரான டிப்ஸ்.

சமையல் சோடா

ஒரு டீஸ்பூன் சமையல் சோடா எடுத்துக் கொண்டு அதனுடன் தேவையான அளவு எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதை காட்டன் பஞ்சைக் கொண்டு பற்களின் கரைகளில் தடவி இரண்டு நிமிடங்கள் கழித்து, பற்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

இதனால் உங்களின் பற்கள் கரைகள் நீக்கப்பட்டு வெண்மையாக பளிச்சிடும்.

எலுமிச்சை பழம்

குறிப்பிட்ட அளவு எலுமிச்சை பழத்தின் சாறு எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு கலந்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த பேஸ்ட்டை பற்களில் நன்றாக தேய்த்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் C மற்றும் கால்சியம் சத்துக்கள் இருப்பதால், இந்த பழத்தின் தோலை காயவைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின் இந்த ஆரஞ்சுப் பழத்தோலின் பொடியைக் கொண்டு காலை மற்றும் இரவு படுப்பதற்கு முன் பற்களை நன்றாக துலக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால், பளிச்சிடும் பற்களை நீங்கள் பெறலாம்.

துளசி இலை

துளசி இலைகள் சிறிதளவு, ஆரஞ்சு தோலின் தூள் ஆகியவற்றை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் இதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து, அதை மஞ்சள் கரை படிந்துள்ள பற்களில் தேய்த்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கரைகள் விரைவில் நீங்கி பற்கள் வெண்மையாக இருக்கும்.

வழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஓர் கிராமத்து வைத்தியம்!

இன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வால் அதிகம் கஷ்டப்படுகின்றனர். இதற்காக எவ்வளவோ முயற்சிகளையும்
மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தப் பாடில்லை.

ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையை ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பின்பற்றி வந்தால், நிச்சயம் தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, தலைமுடியும் நன்கு வளரும். முக்கியமாக இந்த வழியின் மூலம் வழுக்கை விழுந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டச் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெய்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
கற்றாழை

செய்முறை #1

முதலில் கற்றாழை இலையை எடுத்துக் கொண்டு, அதனை முனைகளில் உள்ள கூர்மையான பகுதியை நீக்கிவிட்டு, இரண்டாக பிளந்து கொள்ள வேண்டும். பின் கத்தியால் ஜெல் போன்ற பகுதியில் கீறி விட்டு, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். Ads by

செய்முறை #2

பின்பு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையை ஊசியால் துளையிட்டு, அதனுள் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #3

இந்த எண்ணெயை நேரடியாக சூடேற்றக்கூடாது. மாறாக ஒரு அகன்ற பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதனுள் அந்த எண்ணெய் கலவையுள்ள பௌலை சிறிது நேரம் வைக்க வேண்டும். Ads by Revcontent

செய்முறை #4

அடுத்து அந்த எண்ணெயை ஸ்காலப்பில் படும்படி தடவி 10 நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைமுடியை அலச வேண்டும்.

குறிப்பு

இந்த செயல்முறையை வாரத்திற்கு 4-5 முறை செய்து வந்தால், தலைமுடியில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை நீங்கள் நன்கு காணலாம்.

நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க…

நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயெதிர்ப்பு மண்டலம். இது தான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலைத் தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி உடலைக் காக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்துப் போராடும்.

அதேப் போல் நுரையீரல் உடலின் முக்கிய செயல்பாடான ஆக்ஸிஜனை சுவாசித்து சேகரித்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும் செயலை செய்கிறது. இத்தகைய நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகரித்தால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு இந்த இரண்டையும் பலப்படுத்த உதவும் ஓர் பானம் கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தான் அதிகம்
சளி, இருமல் போன்ற பொதுவான உடல் நல பிரச்சனையால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒருவருக்கு சளி நீண்ட நாட்கள் நீடித்திருந்தால், நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

ஒரு நாளில் சளியின் உற்பத்தி
நம் உடல் ஒரு நாளில் 1-2 லிட்டர் சளியை உற்பத்தி செய்கிறது. அதில் பெரும்பாலானலை அவ்வப்போது வெளியேற்றப்பட்டுவிடும். ஒருவேளை ஒருவருக்கு சளி பிடித்தால், மூச்சுக்குழாய்களில் அடைப்புக்கள் ஏற்பட்டு, அது வேறுபல சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மஞ்சள் அல்லது பச்சை நிற சளி
சிலருக்கு சளியானது நீண்ட நாட்கள் நீடித்து, அந்த சளி பச்சை, மஞ்சள் நிறத்தில் அல்லது இரத்தம் கலந்து வெளியேறினால், உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். அப்போது மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும்.

அற்புத பானம்
நுரையீரல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மற்றும் வலிமையை அதிகரிக்க ஓர் அற்புத பானம் ஒன்று உள்ளது. அதைப் பருகினால் நுரையீரலில் உள்ள சளி மட்டுமின்றி, இதர நச்சுப் பொருட்களும் வெளியேற்றப்பட்டுவிடும்.

பானம் செய்ய தேவையான பொருட்கள்:
* தேன் – 100 கிராம்
* தண்ணீர் – 100 மிலி
* எலுமிச்சை சாறு – 4 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி – 1 இன்ச் (துருவியது)
* ஓட்ஸ் – 50 கிராம்

செய்முறை:
* முதலில் ஓட்ஸை நீரில் ஒருமுறைக் கழுவிக் கொண்டு, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 100 மிலி நீரை ஊற்றி, துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதனை அடுப்பில் ஓட்ஸ் வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி குளிர வைக்கவும்.
* பிறகு அதைக் குளிர வைத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் அந்த பானத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 30-40 மிலி பருக வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து 40 நாட்கள் பருகி வந்தால், சளி முற்றிலும் வெளியேறி, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்திருப்பதை நன்கு உணரலாம். வேண்டுமானால் இந்த முறையை 15 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் 40 நாட்கள் பின்பற்றலாம்.

குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
குழந்தைகள் தான் அதிக அளவில் சளி பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள். எனவே இந்த பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும். கண்டிப்பாக, இந்த பானத்தைக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு சளி பிரச்சனை முற்றிலும் நீங்குவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும்.

சளியை நீக்கும் வேறொரு வழி
நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை உடனடியாக வெளியேற்ற மற்றொரு சிறந்த வழி ஆவிப் பிடிப்பது. அதற்கு நீரை நன்கு கொதிக்க வைத்து, ஒரு போர்வையினுள் 10-15 நிமிடம் நீராவிப் பிடிக்க வேண்டும். இப்படி சளி பிடித்திருப்பவர்கள் செய்து வந்தால், சளி கரைந்து வெளியேறிவிடும்.

நல்லாட்சியிலும் சித்திரவதைச் சம்பவங்கள்?

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி நடத்தும் காலப் பகுதியிலும் இலங்கையில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் எட்டு மாத காலப் பகுதியில் 208 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிற்கு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள 17 பக்க அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரிய சித்திரவதைகள், கொடூரமான துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்கள் சட்ட மா அதிபரிடம் கோரப்பட்ட போதிலும் அந்த விபரங்கள் கிடைக்கவில்லை என மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொட்டாதெனியவா சிறுமி கொலை தொடர்பில் மாணவர் ஒருவர் தவறுதலாக கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு ஏப்ரல் மதத்தின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைகளில் தாக்கியமைக்கு மேலதிகமாக பிளாஸ்டிக் குழாய்களினால் தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் மற்றும் தடுத்து வைக்கப்படும் நபர்களை சந்திக்க செல்லும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேர்வதாக சட்டத்தரணிகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 111 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 29 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் ஒருவர் குற்றச்சாட்டு சுமத்தப்படாது 15 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சில வழக்குகள் 2002ம் ஆண்டு முதல் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் சித்திரவதைகளை வரையறுத்தல் ஆகியனவற்றுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கமல்- கவுதமி திடீர் பிரிவுக்கு.. அந்த பிரபல நடிகைதான் காரணமா?

ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த கமல் ஹாசன், கவுதமி இடையேயான 13 வருட பந்தம் இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பிரிய கமலுக்கு உதயமான, புதிய காதல் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கமல்ஹாசனையும், அவரது காதல் வாழ்க்கையையும் பிரிக்கவே முடியாது. ஸ்ரீவித்யாவுடன் இணைத்து பேசியதில் ஆரம்பித்து, சிம்ரன், கவுதமி என வந்து நிற்கிறது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.

இதில் கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால், ஒவ்வொரு முறை அவர் தனது காதலி/மனைவிகளை பிரியும்போதெல்லாம், அதற்கு காரணமாக இருந்தது இன்னொரு, காதல்தான்.

காதல் பூக்கள்

புதுக்காதல் பூக்கும்போதெல்லாம், பழைய காதல் உதிருவது கமல் வாழ்க்கை நெடுகிலும் காணக்கிடக்கும் சங்கதி. காதல் எப்போதுமே பொசசிவ்னெஸ் கொண்டது. அதிலும் பெண்கள் தங்களவர்களை விட்டுத்தராத குணம் அதிகம் கொண்டவர்கள். எனவேதான், புதுக்காதல் மலரும்போதெல்லாம் பழைய காதலிகள் நகர்ந்து செல்வது வழக்கம்.

லாஜிக் இருக்குதே

சரிகாவுடன் காதல் மலர்ந்ததால்தான், வாணி கணபதியை விவாகரத்து செய்தார், சிம்ரனுடன் கிசுகிசுக்கப்பட்டதால்தான் கமலுடனான 14 வருட திருமண வாழ்க்கையை விட்டு விலகினார் சரிகா. அப்படியானால், இப்போது கவுதமியை விட்டு கமல் விலகவும் மற்றொரு காதல்தானே காரணமாக இருக்க முடியும் என்று லாஜிக் பேசுகிறார்கள் கோலிவுட் தலைகள்.

அடுத்தடுத்து சான்ஸ்

கமல் கடும் நெருக்கடிகளுக்கு நடுவே விஸ்வரூபம் எடுத்த திரைப்படத்தில் நடித்த, நடிகை ஒருவருடன் கிசுகிசு உலவியதை கோலிவுட் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன்பிறகு கமல் நடித்த இன்னொரு படத்திலும் இந்த நடிகை இடம் பிடித்தார். இப்போது மற்றொரு படத்திலும், கமலுடன் அவர் நடித்து வருகிறார். இத்தனை படங்களில் கமலோடு நடிக்க காரணம் இல்லாமல் இருக்குமா..? என தலையை சொறிகின்றன அந்த வட்டாரங்கள்.

மூத்த நடிகை

இதுதவிர புண்ணியத்தலம் ஒன்றின் பெயருடன் வெளியான திரைப்படத்தில் நடித்த சற்று வயது மூத்த நடிகையுடனும் கமல் கிசுகிசுக்கப்படுகிறார். இரண்டில் ஒன்று நிச்சயம் என பெட் கட்டுகிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள். அப்படியெல்லாம் இல்லை, கமல் பாதை இனி வேறு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான தரப்பில். பொறுத்திருந்து பார்ப்போம்.

உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு

உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு

அக்காலத்தில் பெண்கள் அனைவரும் அழகாக இருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? அவர்கள் கெமிக்கல் இல்லாத பொருட்களைக் கொண்டு, உடலைப் பராமரித்து வந்தது தான். அதிலும் அவர்கள் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான், உடலைப் பராமரித்து வந்தார்கள். அந்த பொருட்களாவன மஞ்சள் தூள், தயிர், பால், கடலை மாவு, பயித்தம் பருப்பு மாவு போன்ற பல. அதனால் தான் வீட்டில் உள்ள பாட்டிகள் குளிக்கும் போது மஞ்சள் தூள், கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்தி குளிக்குமாறு சொல்கிறார்கள்.

ஏனெனில் அவற்றில் பல அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் பஜ்ஜி சுடுவதற்கு பயன்படும் கடலை மாவானது ஒரு பாரம்பரிய இந்திய அழகுப் பொருள். இந்த பொருளைக் கொண்டு உடலைப் பராமரித்து வந்தால், பிம்பிள், சரும வறட்சி மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை, சருமத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் பொலிவிழந்த கூந்தல் போன்ற பலவற்றை சரிசெய்ய முடியும்.

இப்போது உடலில் உள்ள பிரச்சனைகளைப் போக்க கடலை மாவை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

கடலை மாவை தயிர் அல்லது ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு மென்மையாக இருக்கும்.

சிலரது சருமத்தில் பிம்பிளானது அதிகம் இருக்கும். அத்தகைய பிம்பிளை போக்குவதற்கு பல பொருட்களைப் பயன்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கடலை மாவில் சிறிது சந்தனப் பவுடர், மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

சிவகார்த்திகேயனின் உண்மை முகம் இதுதான்..!

முகப்பருவை ஒரே நாளில் விரட்டி அடிக்கும் இயற்கை மூலிகை இதுதான்!

வீட்டிலேயே கிடைக்கும் எளிய மூலிகைகளை கொண்டு எப்படி முகப்பருபை வராமல் தடுக்கலாம்..?

* வேப்பங்கொழுந்தை மையாக அரைத்து ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு கலந்து முகப்பருக்களின் மீது பூசி வந்தால் பரு உடைந்து குணம் கிடைக்கும்.

* பெரிய அளவில் பருக்கள் வந்தால் வெள்ளைப்பூண்டை அரைத்து பருக்களின் மீது பூசி வர, நிவாரணம் கிடைக்கும்.

* சுத்தமான சந்தனத்தையும், கஸ்தூரி மஞ்சளையும் மையாக அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் காலப்போக்கில் குணம் கிடைக்கும்.

* கருந்துளசி இலைகளை பருக்களின் மீது பற்று போட்டு வந்தாலும் குணம் கிடைக்கும்.

* புதினா, செம்பருத்தி இலை, மல்லிகை இலை மூன்றையும் தண்ணீருக்குப்பதிலாக தயிர் விட்டு அரைத்து பூசி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

* ஜாதிக்காய், சந்தனம், மிளகு மூன்றையும் அரைத்து பருக்களின் மீது பூசி வந்தால் குணம் கிடைக்கும்.

* கறிவேப்பிலைக்கொழுந்தை மையாக அரைத்து தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, பருக்கள் குறையும். வேப்பிலைச்சாறு தினமும் குடித்து வந்தால் பருக்கள் வராமல் காத்துக்கொள்ளலாம்.

அமெரிக்க தேர்தல்: ஹிலாரியை முந்தினார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 8–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இருவரும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஹிலாரியின் இ–மெயில் விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருப்பது, தேர்தலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. முன்னதாக இரு வேட்பாளர்களுக்கு இடையே நடத்தப்பட்ட நேரடி விவாதம் மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் ஹிலாரியின் கையே ஓங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில் ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கு திடீரென சரிந்துள்ளது. இ-மெயில் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப் போவதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவு நிறுவன இயக்குனர் ஜேம்ஸ் சமீபத்தில் அறிவித்தது ஹிலாரியின் செல்வாக்கு சரிய காரணமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஏபிசி நிறுவனமும் வாஷிங்டன் போஸ்டும் இணைந்து அமெரிக்க தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தியதில், ஹிலாரி கிளிண்டனை விட ஒரு புள்ளி டிரம்ப் அதிகமாக பெற்றுள்ளார். டிரம்ப் 46 சதவீதம் பேரும், ஹிலாரி கிளிண்டனுக்கு 45 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் முதல் முறையாக ஹிலாரி பின் தங்கியுள்ளார்.