பிரிந்துவிடலாம் என கூறிய காதலி..! காதலன் செய்த கொடூர செயல் என்ன தெரியுமா..?!

சுவிட்சர்லாந்து நாட்டின், பேர்ன் நகரில் ஒரு காதல் ஜோடி வசித்து வந்தது. இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளால் காதலை முறித்துக்கொள்வதாக காதலி கூறியுள்ளார்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான காதலன், தனது காதலியை தீர்த்துக் கட்ட முடிவு கட்டினார்.

இந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஒரு பேருந்துநிலையத்திற்கு  காதலியை வரவழைத்தார்.  சில நிமிடங்களில் காதலி ஒரு பெண்ணுடன் அங்கு வந்து சேர்ந்தார்.

அப்போது, திடீரென  காதலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலியை குத்த முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது தோழி காதலனை தடுக்க முயன்றபோது அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

தோழி அங்கிருந்து தப்பி ஓடியதும், தனது காதலியை விரட்டிச் சென்ற காதலன் அவரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளான்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பேர்ன் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.