மடு அன்­னை­யின் ஆனித் திரு­விழா ஏற்­பா­டு­கள் நிறைவு

மன்­னார் மடு அன்­னை­யின் ஆடி மாத திரு­விழா நாளை­ ம­று­தி­னம் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 6.15 மணிக்கு திரு­விழா திருப்­பலி தமிழ்,சிங்­கள மொழி­க­ளில் மன்­னார் மறை­மா­வட்ட அப்­போஸ்­த­லிக்க பரி­பா­லர் மேதகு ஆயர் யோசப் கிங்­சிலி சுவம் பிள்ளை ஆண்­டகை தலை­மை­யில் இடம்­பெ­றும்.

திரு­கோ­ண­மலை மறை­மா­வட்ட ஆயர் நோயல் இம்­மா­னு­வல்,அனு­ரா­த­பு­ரம் மறை­மா­வட்ட ஆயர் நோபட் அன்­றாடி ஆகி­யோர் இணைந்து திரு­விழா திருப்­ப­லியை கூட்­டுத்­தி­ருப்­ப­லி­யாக ஒப்­பக்­கொ­டுக்­க­வுள்­ள­ளார் என்று மடு திருத்­த­ளத்­தின் பரி­பா­ல­கர் அருட்­தந்தை எஸ்.எமி­லி­யா­ணுஸ்­பிள்ளை அடி­க­ளார் தெரி­வித்­தார்.

அதே வேளை மடு திரு­வி­ழா­விற்­காக அரச நிதி­யாக ஒரு மில்­லி­யன் ரூபாய் நிதி­யை கிறிஸ்­தவ மத அலு­வல்­கள் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் ஏ.ஆர்.குண­வர்த்­தன மன்­னார் மறை­மா­வட்ட அப்­போஸ்­த­லிக்க பரி­பா­ல­கர் மேதகு ஆயர் ஜோசப் கிங்­சிலி சுவாம்­பிள்ளை ஆண்­ட­கை­யி­டம் கைய­ளித்­துள்­ளார்.