சமூக வலைத்தளத்தில் தலைகுனிந்த நாமல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், இளம் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சட்டத்தரணி ஆவார்.

எனினும் அவர் சட்டம் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்ட முறை தொடர்பில் இன்றும் சர்ச்சை நிலை நீடிக்கிறது.

இந்நிலையில் சட்டத்தரணிக்கான பரீட்சையில் தான் எத்தனையாவது இடத்தை பெற்றேன் என்பது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை நாமல் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி சிங்கள சேவைக்காக பேஸ்புக் ஊடாக வழங்கிய நேர்காணலில் நாமல் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச சட்டத்தரணிக்காக எழுதிய பரீட்சையில், அவர் முதலிடத்தில் உள்ளதாக விடயம் தொடர்பில் நபர் ஒருவர் பேஸ்புக் ஊடாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுவே நான் சட்டத்தரனி பரீட்சையில் கடைசி இடத்தை பிடித்திருந்தால் பலர் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என நாமல் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

அப்படி என்றால் தாங்கள் சட்டத்தரணி பரீட்சையில் முதலாம் இடத்தை பிடித்தீர்களா என ஊடகவியலாளர் வினவிய போது, தான் எந்த இடத்தை பிடித்தேன் என தனக்கு தெரியவில்லை என நாமல் குறிப்பி்ட்டார்.

கடந்த ஆட்சியின் அனைத்து விடயங்களிலும் சர்வதிகாரத்தை பிரயோகித்த ராஜபக்ஷர்கள் தமக்கு சாதகமான விடயங்களை பெற்றுக்கொண்டனர். அந்த வகையில் நாமல் சட்டத்தரணிக்கான பரீட்சை எழுத்தாத நிலையில் அதிக புள்ளிகளுடன் பரீட்சையில் வெற்றி பெற்றிருந்தார் என அறிவிக்கப்பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.