தேவர் மகன்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தேவர் மகன்
பரதன் இயக்கத்தில் கமல் ஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் இருவரும் இணைந்து நடித்து 1992ல் வெளிவந்த திரைப்படம் தேவர் மகன்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து ரேவதி, கவுதமி, தலைவாசல் விஜய், வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நாசர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த தலைசிறந்த திரைக்கதையை கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக தேவர் மகன் படத்தை பார்க்கப்படுகிறது. இயக்குனர் மிஸ்கின் இப்படத்தை பற்றி பல பேட்டிகளில் புகழ்ந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் நடிக்கவிருந்த நடிகை
இந்த நிலையில், இப்படத்தில் கமல் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தவர் நடிகை ரேவதி கிடையாதாம். அந்த ரோலில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை மீனா தானாம். மீனாவை வைத்து நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளதாம்.

ஆனால், அவருக்கு கிராமத்து பெண் ரோல் செட் ஆகவில்லை என்றும், அவர் மிகவும் இளமையாக காட்சியளித்ததாலும் மீனா இந்த கதாபாத்திரத்துக்கு செட் ஆகமாட்டார் என படக்குழு முடிவு எடுத்துள்ளனர். அதன்பின் தான் அவருக்கு பதிலாக நடிகை ரேவதியை நடிக்கவைத்தார்களாம்.