மலையாள நடிகர் நிவின் பாலியின் சொத்து மதிப்பு

நிவின் பாலி
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர் தமிழில் நேரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால், ரசிகர்கள் அனைவருக்கும் நிவின் பாலி என்று சொன்னால் உடனடியாக நினைவுக்கு வரும் திரைப்படம் என்றால் அது, பிரேமம் தான். காதல் கதைக்களத்தில் நெஞ்சை தோட்ட இப்படம் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் வர்ஷங்களுக்கு சேஷம். இப்படத்தில் Extended Cameo ரோலில் நடித்திருந்தார். மேலும் அடுத்ததாக இவர் நடிப்பில் தமிழில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் வெளிவரவுள்ளது.

சொத்து மதிப்பு
இந்த நிலையில், தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக இருக்கும் நிவின் பாலியின் சொத்து மதிப்பு ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இணையத்தில் இதுகுறித்து பேசப்பட்டு வரும் நிலையில், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.