உண்மையாக No.1?சணல் எது தெரியுமா ?

விஜய் டிவி Vs சன் டிவி
டிவி சேனல்களுக்கு இடையே எப்போதும் போட்டி இருந்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் அவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.

மேலும் வாரம்தோறும் எந்த சேனல் முதலிடம் என புள்ளிவிவரங்களை வெளியாகி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவி தற்போது சன் டிவியை முந்திவிட்டதாக ஒரு போஸ்டர் வெளியிட்டனர். அது சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உண்மையில் யார் No.1?
சென்னை மற்றும் புதுச்சேரியில் 15 முதல் 50 வயது உடையவர்களை மட்டுமே அளவுகோளாக வைத்து விஜய் டிவி தங்களை No 1 என அறிவித்து இருக்கின்றனர்.

ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும், அனைத்து வயதினரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் சன் டிவிதான் முதலிடத்தில் இருக்கிறது.

இதன் மூலமாக யார் நிஜமான நம்பர் 1 சேனல் என்கிற உண்மை தெரியவந்திருக்கிறது.