உங்கள் முகம் பளபளவென வசீகரிக்க இதனை செய்யுங்கள்

இன்றைய காலத்துப் பெண்கள் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள அழகு நிலையத்திற்கு செல்வார்கள்.

அந்த அழகு கொஞ்ச நாட்கள் மட்டுமே நீடிக்கும். அதன் பிறகு பொலிவிழந்து போய் விடும்.

ஆனால், நம் வீட்டிலேயே இயற்கையாக சில பொருட்களை கொண்டு முகத்தில் பயன்படுத்தி பராமரித்து வந்தால் முகம் பளபளவென்று மின்னும்.

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி முகத்தை அழகுப்படுத்தலாம் என்று பார்ப்போம் –

தயிர், வெண்ணெய்யை முகத்தில் அரை மணி நேரம் ஊற வைத்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும்.

வாரம் ஒரு முறை பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவினால் முகம் வசீகரிக்கும்.

பப்பாளி பழத்துடன் பால் கலந்து முகத்தில் அரை மணி நேரம் பூசி பின்பு கழுவினால் முகத்தில் நிறம் கூடும்.

அவ்வப்போது முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

முகத்தில் உள்ள கருமையைப் போக்க மாஸ்க்குகள், ஸ்கரப்கள் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் மிருதுவாகும்.

எலுமிச்சை சாற்றை தினமும் முகத்தில் சிறிது நேரம் தேய்த்து கழுவினால் சருமம் பொலிவு பெறும்.

தினமும் கற்றாழையின் ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிச்சிடும்.

தினமும் அதிகமான தண்ணீர் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி சருமம் மின்னும்.