நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசிப்பழம்

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு நல்ல உணவு, பழங்கள் சாப்பிட வேண்டும். அன்னாசி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் குணங்கள் பல உள்ளன.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைத் தரும்.

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன.

நன்மைகள்

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் அன்னாசிப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது.

இது உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் அன்னாசிப்பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் என்பது உடலில் இரத்த குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரை அளவுகள் மிகவும் அதிகமாக இருக்கும்போது இந்த நிலை ஏற்படுகிறது.

எனவே இரத்த சர்க்கரை அளவைத் தடுக்காத உணவைத் தேர்ந்தெடுப்பது இந்த நாள்பட்ட நோயை இயற்கையாகக் கட்டுப்படுத்த உதவும்.

அன்னாசிப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரைகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையைத் தருகிறது.

பல ஊட்டச்சத்துக்கள்

பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள அன்னாசிப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் உண்னலாம். உடல் எடை குறைக்கவும் அன்னாசிப் பழம் உதவுகிறது.

புளிப்பும் இனிப்புமாக சுவைக்கும் அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகளின் அளவு மிக குறைவாகவும் இருப்பதால் விரைவில் பசி எடுக்காது அதோடு, இதில் உள்ள நார்ச்சத்துக்கள் பல்வேறு நன்மைகளைத் தருகின்றன.

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் நீக்கும் அன்னாசிப்பழம் செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்குகிறது.

அன்னாசிப்பழத்தில் வைட்டமின்-ஏ அதிக அளவில் இருப்பதால், கண்களுக்கும் நன்மை பயக்கும், எலும்புகளை வலுப்படுத்தும்.

பற்களின் ஈறுகள்

மேலும் பற்களின் ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் அன்னாசிப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மூட்டுவலி நோயாளிகளுக்கும் அன்னாசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஈறுகளில் வீக்கத்தைக் குறைக்க அன்னாசிப்பழம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.