பிக்பாஸ் வீட்டில் அசீமை வெளுத்து வாங்கும் ஜனனி

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சிக்கு தமிழகம் தாண்டியும் பெருதொகை ரசிகர்கள் உள்ளனர்.

ஏனெனில் நிகழ்ச்சியில் இலங்கையர்களும் உள்வாங்கப்படுவதே காரணம் ஆகும். தற்போது பலரையும் கவர்ந்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது.

அந்தவலையில் லாஸ்லியா, தர்சனை தொடர்ந்து நெட்டிசன்களை அதிகம் ஈர்த்தவர் சீசன் 6 இல் கலந்துகொண்டுள்ள யாழ்ப்பாண யுவதி ஜனனி ஆவார்.

இந்நிலையில் இன்றைய ஃரமோவில் ஜனனி , அசீமிடம் கோபப்பட்டு லூசுமாதிரி கதைக்காதீர்கள் என கத்த பதிலுக்கு அசீமும் கத்தும் காணொளி வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக ஜனனி அமைதியாக இருப்பதாக பிக்பாஸ் ரசிகர்களால் கூறப்பட்டு வந்த நிலையில் இன்றைய ஃரமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.