பிரித்தானியாவில் ஜஸ்கிரீம் வியாபாரி கொடூர கொலை!

பிரித்தானியாவில் ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவரே கத்தியால் 8 முறை குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று(20) மாலை வடமேற்கு லண்டனின் வெம்பிளேயில் 38 வயதுடைய ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவரே கத்தியால் 8 முறை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோங்க்ஸ் பூங்காவில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து மாலை 6 மணிக்கு பொலிஸார் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கத்திக்குத்து காயங்களால் அவதிக்குள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இன்று அதிகாலை கொலை சந்தேகத்தின் பேரில் 26 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் 31 வயதுடைய பெண் கொலை சதி திட்டம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஐஸ்கிரீம் வியாபாரி தனது பெரிய டெடி பியர் பொம்மை ஐஸ்கிரீம் வண்டி மூலம் உள்ளூர் மக்களிடையே நன்கு அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.