தோசை, இட்லிக்கு அருமையான தேங்காய் பூண்டு செய்யலாம் வாங்க

இட்லி, தோசைக்கு ஏற்ற தேங்காய் பூண்டு பொடியை வெறும் 3 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக காலை உணவு என்றால் அனைவரது நினைவிற்கு வருவது என்னவெனில் இட்லி, தோசை இவைகள் தான்.

இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி என பெரும்பாலான மக்கள் வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் ஒரு சிலர் பொடியை வைத்து சாப்பிடுவார்கள்.

அவ்வாறு பொடியை வைத்து இட்லி தோசையினை விரும்பி சாப்பிடும் நபர்களுக்கு அருமையான சுவையில் தேங்காய் பூண்டு பொடி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
தேங்காய் – சிறிதளவு
மிளகாய் பொடி அல்லது மிளகாய் வத்தல் – 4
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 10 பல்

செய்முறை
கொப்பரை தேங்காவாக இருந்தால் அதனை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு இல்லையெனில் தேங்காயை எடுத்துக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அதனை வாணலியில் போட்டு சிறிது வறுக்கவும்.

வறுத்த தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் மிளகாய் பொடி அல்லது மிளகாய் வத்தல் மற்றும் உப்பு இவற்றினை சேர்க்கவும்.

தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். பின்பு பூண்டு பற்களை தோலுடன் அரைத்த தேங்காயில் சேர்த்து மீண்டும் கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் சுவையான தேங்காய் பூண்டு பொடி தயார்.

இவை தோசை இட்லி மட்டுமின்றி சூடான சாதத்திற்கு போட்டு சாப்பிட்டால் சுவை அருமையாகவே இருக்கும்.