இன்றைய ராசிபலன்30.11.2022

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். கடமையுணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். உற்சாகமான நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்‌. உத்தியோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

துலாம்

துலாம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தி யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். இனிமையான நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷன் ஆவீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனி வாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.