கருத்து வேறுபாடுகளை தீர்க்கும் பரிகாரங்கள்

பல குடும்பங்களில் தந்தையும் மகனும் பங்காளிகளாகவே வாழ்கிறார்கள். பல குடும்பங்களில் தந்தையும் மகனும் ஒரே வீட்டில் இருந்தும் பல வருடங்களாக பேசாமல் வாழ்கிறார்கள். ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருந்தாலும் – நல்ல நிலையில் இருந்தால், ஜாதகன் தன் தந்தை, மகன் அன்பு சிறக்கும். ஜனன கால ஜாதகத்தில் எந்த கிரக நிலவரம் எப்படி இருந்தாலும் தந்தை மகன் கருத்து ஒற்றுமை மிக அவசியம்.

இதற்கு தீர்வு கிடைக்குமா? உண்டா? என்பதே பலரின் ஆதங்கம். உளவியல் ரீதியாக எந்த பிரச்சினைக்கும் தீர்வு அவரவர் கையில் தான் இருக்கிறது. ஒருவருடைய உணர்வை புரிந்து கொள்ளாமை, சிறிய பிரச்சினையை பெரிது படுத்துவது, சகிப்பு தன்மை இன்மையும், கருத்து வேறுபாட்டிற்கு பிரதானமான காரணமாக திகழ்கிறது. ஆனால் தாய், தந்தை, முன்னோர்கள், உடன் பிறந்தவர்கள், நமக்கு பிறக்கும் குழந்தைகள், உற்றார் உறவினர்களை தேர்வு செய்யும் உரிமையை பிரபஞ்சம் யாருக்கும் வழங்கவில்லை. எத்தனை கோவிலுக்கு சென்று

பரிகாரம் செய்தாலும் இந்த பூர்வ ஜென்ம பந்த ரத்த உறவுகளை உதறித் தள்ள முடியாது, உறவுகளே வேண்டாம் என்று ஒதுங்கி நின்றாலும் நம்முன்னோர்கள் தாய், தந்தை வழியாக நமக்குள் புகுந்த மரபணுக்களே நம்மை இயக்கும். எனவே வாழும் காலத்தில் அனுசரித்து வாழ்வதே அனைவருக்கும் நல்லது.

பரிகாரம் வாரிசுகளால் மன உளைச்சலை சந்திப்பவர்கள் பிரதோசத்தன்று சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யவும். தந்தையுடன் கருத்து வேறுபாடு இருப்பவர்கள் சனிக்கிழமை தோறும் ஸ்ரீ மத் ராமாயணத்தில் சுந்தர காண்டம் பாராயணம் செய்து வர வேண்டும். தந்தை-மகன் ஒற்றுமையை அதிகரிக்க கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சுவாமிமலை சென்று வர நல்ல மாற்றம் தெரியும்.