வட கொரிய அதிபர் கிம் ஜோங் உயிருக்கு அச்சுறுத்தல்!

நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வடகொரிய பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அவர் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கிம் ஜோங் உன் மீதான விசுவாசம் அதிகாரிகளுக்கு குறைந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளுடன் எந்த உறவும் கொள்ளாத வடகொரியா
சீனா தவிர்த்து, உலக நாடுகளுடன் எந்த உறவும் முன்னெடுக்காத வடகொரியா, இன்னொரு அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி வந்த நிலையிலேயே, தற்போது கிம் ஜோங் உன் உயிருக்கு அச்சுறுத்தல் என கூறப்படுகிறது.

மேலும் உள்ளூர் அதிகாரிகள் கிம் ஜோங் உன் ஆட்சிக்கு எதிராக சதியில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால், அவ்வாறான அச்சுறுத்தலை எதிர்கொள்ள உயரதிகாரிகள் தரப்பு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அது மட்டுமின்றி, கண்காணிப்பு நடவடிக்கைகள் இனி தீவிரப்படுத்தப்படும் எனவும், சமூக பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அச்சுறுத்தலாக அடையாளம் காணப்படும் நபர்களை மொத்தமாக தண்டிக்கவும் கிம் ஜோங் உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக, வடகொரிய மக்கள் அரசின் அனுமதி இல்லாமல், நாட்டின் எந்த பகுதிக்கும் குடியேறிவிட முடியாது.உள்ளூர் அதிகாரிகளிடம் பதிவு செய்து, அவர்களின் அனுமதியுடன் மட்டுமே வேறு பகுதிகளுக்கு கிடியேற முடியும் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, இடம் மாறும் குடிமக்களை கண்காணிக்கவும், தொடர்ந்து ரோந்து நடவடிக்கை மற்றும் சோதனை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.