வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் செயலியில் கால் லின்க்ஸ் எனும் புது அம்சம் வழங்கப்பட இருப்பதாக கடந்த மாதம் அறிவித்து இருந்தார். இந்த அம்சம் கொண்டு பயனர்கள் புதிதாக கால் செய்யவும், ஏற்கனவே உள்ள அழைப்பில் எளிதில் இணைந்து கொள்ளவும் வழி செய்கிறது. பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்போது பெரும்பாலான பயனர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய வாட்ஸ்அப் கால் லின்க்ஸ் கொண்டு அதிகபட்சம் 32 பேர் ஒரே சமயத்தில் அழைப்பில் பேச முடியும். மேலும் இந்த லின்க்ஸ் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

வாட்ஸ்அப் செயலியின் கால்ஸ் டேபில் புதிதாக கால் லின்க் அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு அழைப்பிற்கான லின்க்-ஐ உருவாக்கிக் கொள்ள முடியும். இதற்கு “கிரியேட் கால் லின்க்” ஆப்ஷனை க்ளிக் செய்தாலே போதுமானது.

மேலும் லின்க் உருவாக்கும் போதே அது வீடியோ அல்லது வாய்ஸ் கால் என்பதை தேரிவு செய்து கொள்ள முடியும். இவ்வாறு உருவாக்கப்படும் லின்க்-களை எளிதில் மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்ஷனில் வழங்கப்படவில்லை. இவ்வாறு செய்ய முற்பட்ட போது கால் லின்க்-இல் இணைய க்யூ ஆர் கோட் காண்பிக்கப்படுகிறது.

முன்னதாக வாட்ஸ்அப் வாய்ஸ் கால் சேவையில் 32 பேருடன் பேசும் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய கால் லின்க்ஸ் அம்சம் பற்றிய தகவலை பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்து இருந்தார். அந்த வரிசையில், இந்த அம்சம் தற்போது அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.