தாய்லாந்தில் 56 வயதான பெண்ணை திருமணம் செய்ய இருக்கும் 19 வயதான இளைஞர்!

தாய்லாந்தி
ல் 56 வயதான பெண்ணை 19 வயதான இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொள்ளவுள்ள சம்பவம் சமூகவலைத்தளங்களில் வ்வைரலாகி வருகின்றது.

19 வயதான வுத்திச்சாய் சந்தராஜ், தனது 10 வயதில், வருங்கால மனைவியான ஜன்லா நமுவாங்ராக்கை சந்தித்தார்.

அவர்கள் இருவரும் வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள சகோன் நகோன் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அண்டை வீட்டாராக இருந்தனர்.

ஜான்லா தனது வீட்டை சுத்தம் செய்ய வுத்திச்சையின் உதவியைக் கேட்டபோது அவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்து கொண்டனர். இந்த ஜோடி பல ஆண்டுகளாக நெருக்கமாக இருந்துள்ளனர்.

விவாகரத்து பெற்ற ஜான்லாவுக்கு முப்பது வயதுள்ள மூன்று குழந்தைகள் உள்ளதுடன் ஜன்லாவிற்கு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

வுத்திச்சாய் எனக்கு சூப்பர் ஹீரோ மாதிரி. தினமும் எனக்கு உதவி செய்வார். அவனை சிறு வயது முதல் தெரியும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் உறவுகளைப் பற்றி தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் தாங்கள் காதலிக்கிறோம் என்று முதலில் சொன்னபோது, தங்களை பைத்தியம் என்று பலர் நினைத்ததாக ஜன்லா கூறினார்.

ஆனால் அவர் என்னை மீண்டும் இளமையாக உணர வைக்கிறார், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம், நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என ஜன்லா கூறியுள்ளாராம்.