ஆறு மாதங்களுக்கு மேலாக கட்டணத்தை செலுத்தாதவர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்படும்

ஆறு மாதங்களுக்கு மேலாக கட்டணத்தை செலுத்தாத 73 ஆயிரம் பேருக்கு நீர் விநியோகத்தை நிறுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

குறித்த 73 ஆயிரம் பேரிடம் இருந்து 145 மில்லியன் ரூபாய் செலுத்தப்படாமல் இருப்பதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இவ்வாறு கட்டணம் செலுத்தப்பட்டதமையினால் திணைக்களத்திற்கு 8 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

6 மாதங்களுக்கு மேல் தண்ணீர் கட்டணம் செலுத்தாதவர்கள் அதற்குரிய கொடுப்பனவுகளை செலுத்துமாறும் குறுஞ்செய்தி ஊடாக கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கமைவாக இதுவரை 100 பேர் மட்டுமே அதற்கான கட்டணங்களை செலுத்தியுள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது

சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியால் நாடு முழுவதும் உள்ள பல ஹோட்டல்கள் நீர் கட்டணத்தை செலுத்தவில்லை என்றும் இந்த நிறுவனங்களும் வாடிக்கையாளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.