ஜெயிலுக்கு சென்ற ஆரி… மைக்கை கழட்டி உடைத்த பாலாஜி!

கடந்த பல வாரங்களாக அமைதியாக இருந்த பாலாஜி தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பி விட்டார். நேற்று முன்தினம் இதற்கு முன் டைட்டில் வென்ற அனைவரும் கடலை சாப்டாங்க என கருத்து தெரிவித்து இருந்தார்.

மேலும் ஆரி டைட்டில் வின் பண்ணா நான் ரொம்ப வருத்தப்படுவேன் என்றும் ஷிவானியிடம் தெரிவித்தார். இதனால் இந்த வாரம் சண்டைகள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நேற்று நிறைவேறி விட்டது.

வாரம் முழுவதும் சுவாரஸ்யம் குறைவாக இருந்த இருவரை நாமினேட் செய்யுமாறு பிக்பாஸ் கூற, ஆரி எழுந்து பாலாஜி பெயரை சொன்னார். அவர் அதற்கான காரணங்களை சொல்லும்போதே பாலாஜி இடையில் பேச, ஒருகட்டத்தில் ஆரி டென்ஷனாகி விட்டார். அங்கேயே இருவரும் முட்டிக்கொண்டனர். கடைசியில் இவர்கள் இருவரும் ஜெயிலுக்கு போகும்படி நேர்ந்தது.

ஜெயிலில் சென்றும் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நிகழ, பாலாஜி முருகதாஸ் கண்டபடி ஆரியை திட்டித்தீர்த்து மைக்கையும் கழட்டி உடைத்து விட்டார். இதைப்பார்த்த பொதுவான ரசிகர்களும் கூட பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் குறும்படம் போட வேண்டும் எனவும் ரசிகர்கள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.