குக் வித் கோமாளி இர்பானுக்கு கருணை காட்டாதீங்க

பிரபல யூடியூபர் இர்பான் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் சிசு ஆணா பெண்ணா என வெளிநாட்டில் செக் செய்து அந்த தகவலை youtubeல் வெளியிட்டார் இர்பான்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் விழா நடத்துவது சகஜம் என்றாலும், இந்தியாவில் இது சட்டப்படி குற்றம். அதனால் இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

அதனை தொடர்ந்து மன்னிப்பு கேட்ட இர்பான் அந்த வீடியோவையும் நீக்கி இருந்தார்.

கருணை காட்டாதீங்க
இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசும்போது இர்பானுக்கு கருணை காட்டாமல் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.