தளபதி 65 படத்தின் இயக்குனர் இவரா.. !!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாஸ்டர் படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவிருந்த நிலையில் அவர் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இதன்பின் இப்படத்தை மகிழ் திருமேனி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் இயக்க வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் சமீபத்தில் இப்படத்தை இயக்க, இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி 65 படத்தை இயக்குனர் எஸ்.ஜெ சூர்யா என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் விஜய்யை வைத்து ஏற்கனவே குஷி எனும் ப்ளாக் பஸ்டர் திரைப்படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் இன்னும் சிலர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் மற்றும் எஸ்.ஜெ. சூர்யா இணைந்து நடிக்க போகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

எதுவாக இருந்தாலும், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ தகவலுக்காக, நாம் சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.