முடி கொட்டுதல் பிரச்சனையா..?

நம்மில் பலருக்கு முடிகொட்டுதல் பிரச்சனை உள்ளது. முடி கொட்டுதல் என்பது பல பேருக்கு வேதனை தரும் விஷயமாகவே இருக்கிறது. வேலை காரணமாக அதை கவனிக்கவும் பராமரிக்கவும் நேரம் இல்லாததே காரணம்.

அதனால் அன்றாடம் நாம் சாப்பிடும் உணவில் கூந்தலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால் பலன் தானாக கிடைக்கும். எந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தான் கவனம் இருக்க வேண்டும்.

முடி உதிர்வுகளுக்கான தீர்வை எந்த உணவின் மூலம் பெறலாம் என்பதை பார்போம். தினமும் இதில் எதையாவது தினமும் சாப்பிட வேண்டும்.

முட்டை, பீன்ஸ், கறுப்பு பீன்ஸ், ஓட்ஸ், கேரட், பாதாம், பீநட்ஸ், வால்நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் .