சினிமா நண்பர்களையும் மிஞ்சிய ட்ரம்ப்- மோடி! வியப்பில் இந்தியர்கள்… வைரலாகும் காட்சி

நட்புக்கு இலக்கணமாக தமிழ் சினிமாவில், ’தளபதி’ படத்தை கூறலாம். தேவா – சூர்யாவின் கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் எவர் கிரீனான ஒன்று.

இளையராஜா இசையமைத்திருந்த அந்தப் படத்தில் ‘காட்டு குயிலு’ என்ற பாடலை ரஜினி-மம்மூட்டி இருவரும் மாற்றி மாற்றி பாடுவது போல உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் குறித்த பாடலை ரஜினி-மம்மூட்டிக்கு பதிலாக இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரையும் வைத்து அந்தப் பாடல் எடிட் செய்யப்பட்டுள்ளது.

ரஜினியாக ட்ரம்பும், மம்மூட்டியாக மோடியும் இந்தப் பாடலை பாடுவது போல உருவாக்கப்பட்டிருக்கிறது. குறித்த பாடலை இணையவாசிகளை வைரலாக்கி வருகின்றனர்.