மியன்மார் பொதுத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு!

மியான்மாரில் டிசம்பர் 28 ஆம் பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

ஆனால், இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டிய இராணுவம், ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து, 2021 பெப்ரவரி மாதம் ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், எதிர்வரும் டிசம்பர் 28 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும், பல்வேறு கட்டங்களாகத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.