இந்து மதத்தில் ஜோதிடம் மற்றும் எண் கணிதத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு.
ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லிவிடலாம்.
அந்தவகையில், பிறந்த திகதியை வைத்து உங்களுக்கான சிறந்த நண்பர்கள் யார் என்று கண்டுபிடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
1ஆம் திகதி பிறந்தவர்கள்- இவர்களுக்கு 2, 4, 7 திகதிகளில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாக அமைவார்கள். மேலும், உங்கள் நண்பர்கள் உணர்ச்சி ஆதரவு தருவதுடன், கனவுகளை நிறைவேற்ற ஊக்கமும் அளிப்பார்கள்.
2ஆம் திகதி பிறந்தவர்கள்- இவர்களுக்கு 1, 4, 7 திகதிகளில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்கள். உங்களின் நண்பர்கள் உணர்ச்சிகளை புரிந்து துணை நிற்பார்கள்.
3ஆம் திகதி பிறந்தவர்கள்- இவர்களுக்கு 1, 5, 9 திகதிகளில் பிறந்தவர்கள் நல்ல நண்பர்களாக இருப்பார்கள். துணை நிற்கும் நண்பர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குவார்கள்.
4ஆம் திகதி பிறந்தவர்கள்- இவர்களுக்கு 1, 2, 7 திகதிகளில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்கள். இவர்கள் மிகவும் நம்பிக்கை மற்றும் நேர்மையாக இருப்பார்க்ள.
5ஆம் திகதி பிறந்தவர்கள்- இவர்களுக்கு 5 திகதிகளில் பிறந்தவர்களே மிகுந்த பொருத்தமான நண்பர்கள். இவர்கள் உங்களுடன் மகிழ்ச்சியான உறவை உருவாக்குவார்கள்.
6ஆம் திகதி பிறந்தவர்கள்- இவர்களுக்கு 5, 9 திகதிகளில் பிறந்தவர்கள் நல்ல நண்பர்களாக இருப்பார்கள்.
7ஆம் திகதி பிறந்தவர்கள்- இவர்களுக்கு 2 திகதிகளில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்கள், மேலும் உணர்ச்சி ரீதியாக உங்களைப் புரிந்து கொள்வார்கள்.
8ஆம் திகதி பிறந்தவர்கள்- இவர்களுக்கு 4 திகதிகளில் பிறந்தவர்கள் சிறந்த நண்பராக துணை நிற்பார்கள். மேலும் கடின காலங்களில் பக்கபலமாக இருப்பார்கள்.
9ஆம் திகதி பிறந்தவர்கள்- இவர்களுக்கு 3, 6 திகதிகளில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்கள். மேலும், இவர்கள் உங்களின் வாழ்க்கையை நிறைவாகவும் ஆர்வமாகவும் மாற்றுவார்கள்.







