பிரபல நடிகை அமலா பால் ரகசிய திருமணமா? வைரலாகும் டுவிட்டர் பதிவு!

பிரபல நடிகை அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பவனிந்தர்சிங்கை காதலிப்பதாகவும், ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

ஏ.எல்.விஜய் உடனான முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து, வேறு ஒருவரை காதலித்து வருவதாக ஆடை பட ரிலீஸ் சமயத்தில் அமலா பால் தெரிவித்திருந்தார்.

அதாவது, மும்பையை சேர்ந்த பாடகர் பவனிந்தர்சிங்கை தான் அமலா காதலிப்பதாகவும், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில் அவரது டுவிட்டர் பக்கத்தில், நீங்கள் தான் உங்களுடையஇரட்டைச் சுடர், பாதுகாவலர், ஆத்மதுணை, அன்பானவர், நம்பிக்கையின் புதிய சக்தி, சுதந்திரமத்திரம், நபிகள், புத்தர், ஆன்மிகவழிகாட்டி, தெய்வீக இணை, ஹீரோமற்றும் ஹீலர் என்பதை அறியும்போதுஎவ்வளவு மயக்கம் அளிக்கிறது” எனும் சிறுகதை எழுத்தாளர் ரூன் லஸுலியின் வரிகளைபதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள், அமலாபால் காதலிக்கவில்லை, நமக்கு நாம் தான் எல்லாம் என சொல்லாமல் சொல்லியுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளனர்.