இரண்டாம் இடத்தை தனதாக்கியது மைக்ரோசொப்ட் எட்ஜ் இணைய உலாவி

உலகளவில் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலாவியின் வரிசையில் மைக்ரோசொப்ட் நிறுவனம்தின் எட்ஜ் உலாவி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்னர் மைக்ரோசொப்ட் எக்ஸ்புளோரர் எனும் பெயரில் முதலிடத்திலிருந்த குறித்த உலாவியானது கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா ஃபயர்பாக்ஸ் என்பவற்றின் வருகையை தொடர்ந்து பின்னிலைக்கு தள்ளப்பட்டது.

அதன் பின்னர் சில வருடங்களுக்கு முன்னர் எட்ஜ் எனும் பெயரில் பல மேம்படுத்தல்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது இரண்டாவது இடத்திலிருந்த ஃபயர்பாக்ஸ் உலாவியை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை தனதாக்கியுள்ளது.

இதன்படி 68.50 சதவீத சந்தைப் பங்குகளுடன் கூகுள் குரோம் முதலாம் இடத்திலும், 7.59 சதவீத பங்குகளுடன் எட்ஜ் இரண்டாம் இடத்திலும், 7.19 சதவீத பங்குகளுடன் ஃபயர்பாக்ஸ் உலாவி 3 ஆம் இடத்திலிரும் இருப்பதுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 மற்றும் ஆப்பிளின் சபாரி என்பன முறையே நான்காம், ஐந்தாம் இடங்களில் காணப்படுகின்றன.