iPhone SE 2 எப்போது அறிமுகமாகின்றது தெரியுமா?

ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை உடைய iPhone SE கைப்பேசியினை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

இந்நிலையில் இதன் மற்றுமொரு பதிப்பினை இவ் வருடம் அறிமுகம் செய்வதற்கு எதிர்பார்த்திருந்தது.

எனினும் தற்போது உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக பிற்பபோட்டிருந்தது.

அத்துடன் இக் கைப்பசியினை iPhone 9 எனும் பெயரில் அறிமுகம் செய்வதாக இருந்தது.

ஆனால் தற்போது iPhone SE 2 எனும் பெயருடன் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வாரத்தினுள் iPhone SE 2 அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..