இரு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் பணியிடை நீக்கம்!

கிளிநொச்சி காவல் நிலையத்தைச் (kilinochchi police station)சேர்ந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பப் பிணக்கு தொடர்பாக கிளிநொச்சி காவல் நிலையத்தில்( 25.07.2025)அன்று விசாரணைகளுக்காக சந்தேக நபர் ஒருவர் அழைத்து வரப்பட்டிருந்தார்.

கடமையில் இருந்த இருவர் பணிநீக்கம்
இவர் விசாரணைகளுக்காக பாவல் நிலையத்தின் விசாரணை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அன்று மதியம்12.08மணி அளவில் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் இடம்பெற்ற வேளை கடமையில் இருந்த காவல்துறை உப பரிசோதகர் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.