கொரோனாவை கட்டுப்படுத்தும் ரசம்!… தமிழர்களின் பாரம்பரிய உணவு!!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான ரசத்திற்கு திடீர் அதிஷ்டம் கொட்டியுள்ளது. ஏனென்றால் ரசத்தில் சேர்க்கப்படும் பூண்டு, மிளகு போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனும் காரணத்தினால் சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் ரசபொடி அதிக அளவில் விற்கப்படுவதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள்உலாவி வருகிறது.

இதே போல் மஞ்சள் மற்றும் மஞ்சள் பொடிக்கும் வெளிநாடுகளில் மவுசு கூடியுள்ளது. எனவே, அனைவரும் ரசம் சாப்பிடுங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொண்டு ஆரோக்கியமாக இருங்கள் என்று சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.