WWE வரலாற்றில் முதல் முறையாக, ஆளில்லா கடையில் டீ ஆற்றிய WWE வீரர்கள்.! பரிதாபமான நிலையில்

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் 114 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 2 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

உலகம் முழுக்க 169,610 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க 6,518 மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். சீனாவில் 80,860 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சீனாவில் 3,213 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கொரோன வைரஸ் தாக்கத்தால் WWE வரலாற்றில் முதல்முறையாக பார்வையாளர்கள் இல்லாமல் WWE நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்த அதிபர் டிரம்ப், தானும் பரிசோதனை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

அமெரிக்காவில் WWE நெட்வொர்க் பார்வையாளர்களை ஈர்ப்பது குறிக்கோளாகக் கொண்டு குத்துச்சண்டை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனுடைய WWE நெட்வொர்க் நடத்தும் ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியை வழக்கம்போல கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்முறையாக பார்வையாளர்கள் இல்லாமல் நடை பெற்றது. WWE வீரர்கள் மட்டுமே காம்பைரிங் செய்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு விளையாடிவிட்டு சென்றனர்.