முதுகு பகுதியில் கருப்பாக இருக்கிறதா?

இன்றுள்ள பரபரப்பான நிலையில் நமது முகம்., கை., கால் போன்ற பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு., முதுகு பகுதியில் இருக்கும் அழகை பராமரிப்பதிலேயோ அல்லது அழுக்குகளை நீக்குவதில் எந்த விதமான முக்கியத்துவமும் அளிப்பதில்லை.

இதனால் நமது முகத்தோற்றம் பொலிவுடன் காணப்பட்டாலும்., முதுகு பகுதியில் இருக்கும் கருமை நிறமான அழுக்குகள் அடுத்தடுத்து சேர்ந்து., நமது முதுகின் அழகையும்., ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. நமது முதுகை பராமரிப்பதும் நமது உடல் நலத்தை அதிகரிக்கும். இயற்கையான முறையில்., முதுகில் இருக்கும் கருமையை அகற்றும் முறைகள் குறித்து இனி காண்போம்.

இல்லங்களில் இருக்கும் தேன் மற்றும் எலுமிச்சை பழத்தை சம அளவில் எடுத்துக்கொண்டு., முதுகில் பூசி சுமார் அரைமணிநேரம் கழித்த பின்னர்., சோப்பு உபயோகம் செய்யாமல் குளிக்க வேண்டும். இந்த முறையை இரவு நேரத்தில் செய்து பின்னர் குளித்து விட்டு தூங்க வேண்டும். இம்முறையை செய்து வெயிலில் செல்ல கூடாது.

அடுத்த முறையாக., தேன் மற்றும் கடலைமாவு., மஞ்சள் தூளில் சேர்ந்து முகம் மற்றும் உடலில் தேய்த்து கொள்ள வேண்டும். பின்னர் சுமார் 20 நிமிடங்கள் கழித்த பின்னர் குளித்து வந்தால்., உடலின் கருமை நிறமானது நீங்கி இருக்கும்.

கடல் உப்பு., வைட்டமின் இ மற்றும் தேனை நன்றாக சேர்த்து., உடலில் நன்றாக தேய்த்து குளித்து வந்தால்., நமது உடலின் தோள்கள் இழந்த அழகை மீட்டு கொடுக்கும். மேலும்., தக்காளி மற்றும் எலுமிச்சை சாறை நன்றாக கலந்து., சுமார் 20 நிமிடங்கள் கழித்த பின்னர் குளித்து வந்தால் மேனி அழகு பெறும். ஆரஞ்சு பழத்தின் தோலை தூளாக்கி., இதனுடன் ரோஸ் வாட்டரை சேர்ந்து முதுகில் தேய்த்து., குளித்து வந்தால் தோலின் கருமை நிறமானது மாறும்.