“மதுப்பழக்கம் உடலுக்கு மிகவும் ஆபத்தானது.” அப் பழக்கத்தைக் கைவிட நினைக்கிறீர்களா? இதோ சில இயற்கை வழிகள்!

இது அனைவருக்குமே தெரியும். ஆனால் அதைக் கைவிட முடியாமல் பலர் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். மது அடிமையில் இருந்து விடுபடுவது என்பது எளிதானது அல்ல. மன வலிமையும், ஆரோக்கியமான டயட்டும் தான் மதுப்பழக்கத்தைக் கைவிடுவதற்கு மிகவும் முக்கியமானது.

கேரட் ஜூஸ் மது குடிப்பதன் மீதுள்ள ஆவலைக் குறைத்து, விரைவில் அப்பழக்கத்தை கைவிட உதவியாக இருக்கும். அதிலும் குறிப்பிட்ட சில ஜூஸ்களை அன்றாடம் குடித்து வருவதன் மூலம் எளிதில் குடிப்பழக்கத்தைக் கைவிடலாம். அந்த ஜூஸ்களாவன

* கேரட் ஜூஸ்

* அன்னாசி ஜூஸ்

* ஆரஞ்சு ஜூஸ்

* ஆப்பிள் ஜூஸ்

மதுப் பழக்கத்தைக் கைவிட நினைப்போருக்கு, எப்போது மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் எழுகிறதோ, அப்போது 2-4 உலர் திராட்சையை வாயில் போட்டு மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம், ஆல்கஹால் மீதுள்ள ஆவல் குறைய ஆரம்பிக்கும்.

துளசி இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பணியை சிறப்பாக செய்யும். மதுப் பழக்கத்தை கைவிட நினைப்போர், துளசி இலைகளை வாயில் போட்டு அவ்வப்போது மென்று வருவதன் மூலம், மது அருந்த வேண்டுமென்ற எண்ணமே எழாது.

பாகற்காய் இலைகளும் துளசி இலையைப் போன்றே உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்ற உதவும் மற்றும் மதுப் பழக்கத்தில் இருந்து ஒருவரை மீட்டெக்க மிகவும் உதவியாக இருக்கும்.

பாகற்காய் சாப்பிடும் முறை.

முதலில் பாகற்காயின் இலைகளை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளர் மோரில் 2 ஸ்பூன் பாகற்காய் ஜூஸ் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி அடிக்கடி தயாரித்துக் குடித்து வந்தால், மதுப்பழக்கத்தின் மீதுள்ள ஆவல் குறையும் மற்றும் அடிமையான மதுப் பழக்கத்தில் இருந்து மீண்டெழலாம்.

ஒரு டம்ளர் பாலில் 1 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், மதுப் பழக்கத்தில் இருந்து விடுபடலாம். அஸ்வகந்தாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இவை ஆல்கஹால் அடிமையில் இருந்து விடுவிக்க உதவும்.

சில துளிகள் இஞ்சி எண்ணெயுடன் தேன் சேர்த்து கலந்து உட்கொள்வதன் மூலம், மதுப் பழக்கத்தைக் கைவிடலாம். இப்படி மதுப் பழக்கம் உள்ள ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், எளிதில் அடிமையான மதுப் பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.