அப்பாவின் காதலுக்கு உதவ மகள் செய்த செயல்!

மனைவியை பிரிந்து தனிமையில் வாழும் தனது அப்பா டேட்டிங் செல்வதற்கு மகள் செய்த ஒரு உதவி, இணையத்தை காதல், பாசம், கண்ணீர் என பல வித உணர்வுகளால் நிரப்பியிருக்கிறது.

டெக்சாசைச் சேர்ந்த Jeff, (56) மனைவியைப் பிரிந்தவர்.

ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்வதற்காக, எந்த உடையை அணிவது என குழப்பம் ஏற்பட, தனது மகள் Carli Saville (19)இன் உதவியை அவர் நாடியுள்ளார்.

ஒரு வெள்ளை சட்டையை அணிந்து ஒரு புகைப்படம் எடுத்து அவர் அனுப்ப, நீல நிற சட்டை ஒன்றை அணிந்து மற்றொரு புகைப்படம் எடுத்து அனுப்ப சொல்லியிருக்கிறார் Carli.

இரண்டு படங்களையும் பார்த்த Carli, அப்பாவிடம், நீல நிற சட்டையை அணிந்து, டக் இன் செய்து, பெல்ட் அணிந்து கொள்ள ஆலோசனை கூறியுள்ளார்.

பின்னர் இரண்டு படங்களையும், அப்பாவும் மகளும் பகிர்ந்து கொண்ட செய்திகளையும் ட்விட்டரில் வெளியிட்டு, ’தனியாக வாழும் அப்பா, டேட்டிங் செல்ல ஆலோசனை கேட்கிறார், என் இதயத்தில் அன்பும் சோகமும் ஒரே நேரத்தில்’ என பதிவிட, அவர் எதிர்பாராத விதமாக அந்த ட்வீட் வைரலானது.

ஒருவர், அவர் இப்போது ட்விட்டரின் தனியாக இருக்கிற அப்பா, அவரை எப்படியாவது பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று ட்வீட்ட, மற்றொருவர், இப்படி ஒரு இனிமையான நபரா, எனக்கு அழுகையாக வருகிறது என்று எழுதியிருந்தார்.

இன்னொருவர், அந்த நீல நிற டக் இன் செய்யப்பட்ட உடையில் அவர் மயக்குகிற அளவுக்கு சூப்பராக இருக்கிறார் என்று எழுதியிருந்தார்.

கொஞ்ச நேரத்துக்குள்ளேயே அந்த ட்வீட் 166,000 லைக்குகளுக்கும் அதிகம் பெற்றது. ஆனால் அன்று இரவு Jeff சோகமாக வீட்டுக்கு வருவதைக் கண்ட Carli, நடந்ததை கணித்து அமைதியாக இருந்து விட்டார்.

Jeffக்கு அந்த டேட்டிங் வெற்றிகரமாக முடியவில்லை என்ற செய்தி அறிந்ததும், தொடர்ந்து அவருக்கு பல செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

ட்விட்டர் பயனர்கள் பலர், துணையை இழந்த தங்கள் அம்மாக்களின் படத்தை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அதில் ஒரு பெண், தன் அம்மாவின் படத்தைப் போட்டு அதின் கீழ், என் அம்மாவுக்கும் ஒரு துணை வேண்டும் என்று எழுத, இன்னொரு பெண், தன் அம்மாவின் படத்தை பதிவேற்றம் செய்து, இது நானும் என் அம்மாவும், என் அம்மா தனியாக இருக்கிறார், கொஞ்சம் முரட்டு அம்மா அவர், என்று எழுதியிருக்கிறார்!