239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் விலகியது!

காணாமல் போன மலேசிய விமானமான எம்.எச்.370-யின் விமானியே, அனைவரையும் வேண்டுமென்றே கொன்றார் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு, எம்.எச் 370 விமானம், கோலாலம்பூரில் இருந்து, பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த போது மாயமானது.விமானத்திற்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், மூன்று பிரெஞ்சு பயணிகளின் நிலை குறித்து அறிய, காணாமல் போன விமானத்திலிருந்து அதிக அளவு விமான டேட்டாகளை பாரிஸ் அதிகாரிகள் அணுகினர்.

ஒரு வருடங்களாக டேட்டாகளை ஆய்வு செய்து வரும் பிரான்ஸ் அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், இந்தியப் பெருங்கடலில் விமானம் விழுந்தபோது சிலர் கட்டுப்பாட்டு அறையில் இருந்தனர் என தெரியவந்துள்ளதாம். மனச்சோர்வடைந்த நிலையில் இருந்த விமானி கடைசி வரை கட்டுப்பாட்டில் இருந்தார் என கூறியுள்ளனர்.

டேட்டாகளின் மூலம் விமானத்தில் ஏற்பட்ட சில அசாதாரண திருப்பங்களை மனிதர்களால் மட்டுமே செய்ய முடியும் என கண்டறிந்துள்ளனர். மேலும், புதிய ஆதாரங்களின் மூலம் இந்த பேரழிவு ஒரு கொலை-தற்கொலை என குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம், பதற்றமாக, தனிமையாக இருந்த விமானி ஜஹரி அஹ்மத் ஷா, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் ஊழியர்களையும் வேண்டுமென்றே கொன்றார் என்ற முடிவுக்கு பிரான்ஸ் அதிகாரிகள் வந்துள்ளனர்.

இந்த முடிவு மிக விரைவில் திட்டவட்டமாகக் எடுக்கப்பட்டாலும், வேறு யாரும் விமான கட்டுபாட்டு அறைக்குள் நுழைந்திருக்க வாய்ப்பு இல்லை என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சிலர் வாதிடுவதால், பலர் பிரான்ஸ் புலனாய்வாளர்களுடன் உடன்படவில்லை.