அகுங் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து விமான சேவைகள் பாதிப்பு!

இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள அகுங் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

3 கிலோமீட்டர் தூரம் வரை அகுங் எரிமலை, எரிமலைக் குழம்பைக் கக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக, பாலி தீவின் அனைத்துலக விமான நிலையத்தில் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், மேலும் சில விமானங்கள் வேறு இடங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.