பிள்ளைகள் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக அம்மாக்கள் எடுக்கும் ஆபாச படம்!

ஆபாசப் படங்கள் கற்பிக்கும் இயற்கைக்கு மாறான பாலுறவும் கொடூரமான வன்புணர்வுக் காட்சிகளையும் பார்த்து பாலுறவு என்றாலே இதுதான் என பிள்ளைகள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதை கற்பிப்பதற்காக, அம்மாக்கள் சிலர் சேர்ந்து பாலுறவு படம் ஒன்றை எடுத்துள்ளார்கள்.

அதில் அவர்கள் நடிக்கவில்லை, பொதுவாக படங்களில் நடிப்பவர்களையே அந்த படத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

தற்செயலாக கண்ட ஒரு ஆபாசப்படத்தின் காட்சி ஒன்றைக் கண்டு பதறி கண்ணீர் விட்ட நிலையில், இது உண்மையல்ல, நாளை தனது மகன் இதுதான் பாலுறவு என்று எண்ணி தனது மனைவியை இவ்வாறு நடத்தக்கூடாது என முடிவு செய்ததாக தெரிவிக்கிறார் Sarah என்னும் தாய்.

இந்த படத்தை எடுப்பதற்காக ஆபாச பட துறையை கண்ணால் கண்ட ஐந்து தாய்மார்களில் ஒரு பெண் அதிர்ந்துபோய், படக்குழுவிலிருந்து விலகி விட்டார்.

ஆறு குழந்தைகளுக்கு தாயான Sarah Louise, ஆபாச படம் ஒன்றை பார்த்ததும் தவிர்க்க முடியாமல் வாந்தி எடுத்திருக்கிறார்.

என் குழந்தைகள் இப்படிப்பட்ட படத்தைப் பார்க்ககூடாது என்று கூறும் அவர், ஆபாச பட நடிகைகள் சாதாரண பெண்கள் அல்ல, அவர்கள் இயற்கைக்கு மாறான பாலுறவு செயல்களை இயற்கையானது என பிள்ளைகளை நம்ப வைத்து அவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்கிறார்.

முறையே 18 மற்றும் 20 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகள் உடைய முன்னாள் தலைமையாசிரியரான Emma, தானும் பிள்ளைகளும் பல விடயங்களை வெளிப்படையாக பேசிக்கொண்டாலும் ஆபாசப்படங்கள் குறித்து பேசிக் கொள்வதில்லை என்கிறார்.

அது குறித்து கேட்டபோது, அது இயற்கைக்கு மாறானது என்று அவர்கள் எண்ணுகிறார்கள், ஆனால் பையன்களைக் கேட்டால், அதைத்தான் தாங்கள் பெண்களிடம் செய்யப்போவதாக அவர்கள் எண்ணுவதாக கூறியுள்ளார்கள்.

அவர்கள் உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த படம் எடுக்கும் முயற்சியில் தானும் பங்கேற்பதாக தெரிவிக்கிறார் அவர்.

மான்செஸ்டரை சேர்ந்த Anita (43) ஆபாச படம் குறித்துக் கூறும்போது, அது தானும் தன் கணவரும் பாலுறவு வாழ்க்கையில் அனுபவித்தது அல்ல தான் கண்டது என்கிறார்.

ஏற்கனவே தன் பிள்ளைகளிடம் இது குறித்து எச்சரித்துள்ளதாகவும் இதற்காகவே தானும் அந்த புராஜக்டில் இணைந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

சில நேரங்களில் வார்த்தைகளை விட செயல்கள் சத்தமாக ஒலிக்கும் என்று கூறும் அவர், இந்த செய்தியை தங்கள் படம் வெளிப்படுத்தும் என்றும் இந்த திட்டத்தில் தாய்மார்களாகிய தாங்கள் இருப்பதில் மிகவும் பெருமையடைவதாகவும் தெரிவிக்கிறார்.